எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன். முதல் பாகம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் திரைப்படம் வென்றது. மேலும், ஒடிடி தளத்தில் படம் வெளியாகி, மக்கள் மத்தியில் இன்னும் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. சென்னையில் கடந்த 15ஆம் தேதி புரொமோஷன் தொடங்கிய நிலையில், கடந்த முறை போலவே இந்தியா முழுக்க டூர் செய்கிறது படக்குழு.
நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபலா, விக்ரம் ஆகியோர் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், மாணவர்களுடன் கலந்துரையாடியது படக்குழு. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு ஏன் இந்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது குறித்து பேசியிருந்தார்.
இந்தி மொழி பேசுபவர்களுக்கு முதல் பாகத்தை புரிந்துகொள்வதில் சில கடினங்கள் இருந்தது என்றார். கதை, தமிழர்கள், சோழர்கள் வரலாறு குறித்து அறிந்திடாதவர்களுக்கு திரைப்படத்தை உள்வாங்கிக்கொள்வதில் சிரமங்கள் இருந்திருக்கும் என்று பேசினார்.
எனினும், முதல் பாகம் ஒடிடியில் வெளியானபோது, இந்தி ரசிகர்களால் படத்துடன் ஒன்ற முடிந்தது என்றார்.
தொடர்ந்து பேசியவர், “என் நண்பர்களுக்கு கதைச் சுருக்கத்தை வாட்ஸ் அப் குறுஞ்செய்தியாக அனுப்பினேன், அது அவர்களுக்கு கதையை புரிந்துகொள்ள உதவியது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கதையை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது. உண்மையில் படம் இரண்டாம் பாகத்தில் தான் தொடங்கும்” என்று கூறினார்
தொடர்ந்து பேசிய நடிகர் விக்ரம், “பெயர்களை உச்சரிப்பதில் தான் சிரமங்கள் இருந்திருக்கும். எனக்குமே சில பெயர்களை சரியாக சொல்ல முடியவில்லை. உங்கள் நிலை புரிகிறது.
மூன்று தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பான இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும், நிறைய சிரமங்கள் கடந்து இந்தி ரசிகர்கள் அளித்த வரவேற்பு ஆச்சரியமாக இருந்தது.
படத்தில் போடப்பட்டுள்ள முடிச்சுகளுக்கு தீர்வு காண நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. முதல் பாகம் அறிமுகம் மட்டுமே, இரண்டாம் பாகத்தில் முக்கிய திருப்பங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன” என்றார்
என் டி டி வி க்கு பேட்டியளித்த நடிகை த்ரிஷா, “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆக்ஷனும், ரொமான்ஸும் கூடுதலாகவே இருக்கும். படம் இன்னும் விறுவிறுப்பாக நகரும்” என்றார்.
முதல் பாகம், கதாபாத்திரங்களின் அறிமுகமே. கதை உண்மையில் இரண்டாம் பாகத்தில் தான் தொடங்குகிறது என்று கூறியிருந்தார். மேலும் தனது வாழ்நாளில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் சிறந்த 5ல் குந்தவை கதாபாத்திரம் நிச்சயம் அடங்கும் எனவும் த்ரிஷா தெரிவித்திருந்தார்
பின்னர் பேசிய நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ”படத்தின் தூண்களே பெண்கள் தான்” என்றார்.
முக்கிய முடிவுகள் எடுப்பது, தக்க ஆலோசனை வழங்குவது, கட்டளைகளிடுவது, வழித்துணையாக வருவது என, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்கள் பெண்கள் தான். அவர்களின் ஆளுமை தான் ஓங்கியிருக்கும். இதனை இங்குள்ள ஆண்களிடம் கேட்டால் அவர்களே ஒப்புக்கொள்வார்கள்” என்றார்.
வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, வானதியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust