ரஜினிகாந்த் 170 : போனி கபூர் தயாரிப்பில் நெருப்புடா அருண்ராஜாவுடன் ரஜினி இணைவதாக தகவல்

ரஜினிகாந்தின் 170 வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருக்கிறார்
Rajinikanth

Rajinikanth

Twitter

Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படத்தை பாடலாசிரியர் மற்றும் இயக்குனரான அருண்ராஜா காமராஜா அவர்கள் இயக்குவதாக தகவல் வந்துள்ளது .

<div class="paragraphs"><p>Arunraja Kamaraja</p></div>

Arunraja Kamaraja

Twitter

ரஜினிகாந்தின் #Thalaivar169 படத்தை டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாகவும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வந்தது.இந்த நிலையில், தற்போது, ​​சூப்பர் ஸ்டார் தனது 170-வது படத்தை பாடகர் பாடலாசிரியர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

‘ராஜா ராணி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ’மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்பட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். பாடல்களை பாடியும் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ‘கனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். தற்போது போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கியுள்ளார்.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். அருண் ராஜா, ’கபாலி’படத்தில் ரஜினிக்காக, ’நெருப்புடா’ பாடலை எழுதி இருந்தார்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com