Jailer: "படம் சுமார் தான்" ஜெயிலர் வெற்றி விழாவில் என்ன பேசினார் ரஜினிகாந்த்?

நிஜமாக சொல்லவேண்டும் என்றால், எனக்கு படம் above average ஆ தான் இருந்துச்சு. ஜெயிலர் வெற்றியடைந்ததற்கு நான் 5 நாட்கள் தான் சந்தோஷமாக இருந்தேன்
Jailer: "படம் சுமார் தான்" ஜெயிலர் வெற்றி விழாவில் என்ன பேசினார் ரஜினிகாந்த்?
Jailer: "படம் சுமார் தான்" ஜெயிலர் வெற்றி விழாவில் என்ன பேசினார் ரஜினிகாந்த்?twitter
Published on

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நெல்சன் இயக்கிய இந்த ஜெயிலர் திரைப்படமானது, பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை புரிந்தது. அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும், ரஜினிகாந்த்தை இந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாற்றியது.

நெல்சன், ரஜினிகாந்த், அனிருத் என அனைவருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது படக்குழுவினர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த வெற்றி விழா கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த், ரீ ரிக்கார்டிங்கிற்கு முன்பு படம் சுமாராக தான் இருந்தது என்றும், அனிருத் தான் படத்தை தூக்கி நிறுத்தியதாக கூறியுள்ளார்.

படம் முதலில் பார்க்கும் போது ரீ ரிக்கார்டிங் இல்லாமல் தான் பார்த்தோம். அப்போது எல்லோரும் படம் நன்றாக இருக்கிறது என்றனர். நான் சொன்னேன், நீ நெல்சனோட ஃபிரெண்ட். நீ அப்படி தான் சொல்லுவ என்று சொல்லிவிட்டு, செம்பியன் என்பவரிடம் கேட்டேன்.

அவர் சார், average சார் என்றார்!

Jailer: "படம் சுமார் தான்" ஜெயிலர் வெற்றி விழாவில் என்ன பேசினார் ரஜினிகாந்த்?
Jailer: "சாரே கொல மாஸ்" - சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுத்த Shiva Rajkumar யார் தெரியுமா?

"நிஜமாக சொல்லவேண்டும் என்றால், எனக்கு படம் above average ஆ தான் இருந்துச்சு, ஆனா நம்ம அனிருத் அப்டியே தூக்கி நிறுத்திட்டாரு. அவர் எனக்கு மகன் தான்” என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

மேலும் பேசியவர்,

”அவருடைய நோக்கமே, எனக்கு ஒரு ஹிட் படம் கொடுக்கவேண்டும், அவருடைய நண்பர் நெல்சனுக்கு ஹிட் கொடுக்கவேண்டும் என்பது தான்.

இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தின் உதவி இயக்குநர்களை இப்போது தான் பார்க்கிறேன், இவர்களே ஹீரோ மாதிரி தான் இருக்கிறார்கள்” என்று கூறினார் ரஜினி.

தொடர்ந்து, ஜெயிலர் வெற்றியடைந்ததற்கு நான் 5 நாட்கள் தான் சந்தோஷமாக இருந்தேன், அதற்கு பிறகு எனக்கு அடுத்த படம் குறித்த பயம் வந்துவிட்டது. ஏனென்றால், இதை விட சிறந்த படமாக இருக்கவேண்டும் இல்லையா? என்றார்

மேலும், கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், அவர் அளித்த காரில் தான் விழாவுக்கு வந்ததாக சொன்னார். “இப்போதான் எனக்கு பணக்காரனான ஃபீலிங்கே வருது” என்று நகைச்சுவையாக பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் டி ஜெ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படமும், அதற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார். மேலும் அவரது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படம் சுமார் தான் என்று ரஜினி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Jailer: "படம் சுமார் தான்" ஜெயிலர் வெற்றி விழாவில் என்ன பேசினார் ரஜினிகாந்த்?
Jailer vs Blue Sattai Maran: பணம் வாங்கிட்டு படத்தை Promote செய்றாங்களா? வெளியான வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com