பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ரன்பீர் கபூர்-ஆலியா பட் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.சமீபத்தில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது ஏப்ரல்-17ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏப்ரல்-13ம் தேதி முதல் ஏப்ரல்-17ம் தேதி வரை நடக்கும் இந்த திருமண நிகழ்வுகளில் நெருங்கிய நண்பர்கள், பிரபலங்கள், உறவினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே இவர்களது திருமணம் பஞ்சாபி முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இணையத்தளத்தில் தகவல்கள் பரவின.
முன்னதாக ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, விக்கி கவுசல் - கேத்ரீனா கைஃப் திருமண வரவேற்பு பாலிவுட் வட்டாரங்களை கலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.