ரஞ்சிதமே : அழகி சீரியல் இயக்குநரின் அடுத்த படைப்பு - கலைஞர் டிவியில் ரிலீஸ் எப்போது?

தனது காதலனை கரம்பிடிக்க நினைக்கும் நாயகி. தடையாக இருக்கும் காதலனின் அம்மா. அம்மா பிள்ளையாகவே இருக்கும் நாயகன் ஆகிய கதாப்பாத்திரங்களைச் சுற்றி இந்த கதை நகர்கிறது.
ரஞ்சிதமே :  அழகி சீரியல் இயக்குநரின் அடுத்த படைப்பு - கலைஞர் டிவியில் ரிலீஸ் எப்போது?
ரஞ்சிதமே : அழகி சீரியல் இயக்குநரின் அடுத்த படைப்பு - கலைஞர் டிவியில் ரிலீஸ் எப்போது?Twitter
Published on

கலைஞர் தொலைக்காட்சியில் ஜூலை 17 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது ரஞ்சிதமே தொடர்.

இந்தத் தொடரில் ரஞ்சிதா என்கிற கதாபாத்திரத்தில் மனிஷாஜித்தும், அருண் என்கிற கதாபாத்திரத்தில் ஷிவ் சதீஷூம் நடிக்கிறார்கள்.

மனிஷாஜித் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான `உயிரே' தொடரின் மூலம் நாயகியாக சின்னத்திரைக்குள் அறிமுகமானவர். கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக மீடியாத்துறையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். 'கம்பீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவரது முகம் பலருக்கும் பரிச்சயம். 

அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷும் சின்னத்திரையில் நடித்தவர்தான். மின்னலே, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்தவர். இவர்தான் இந்தத் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தத் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரூபஶ்ரீ நடிக்கிறார். `பாரதி கண்ணம்மா' தொடரில் தனது எதார்த்தமான நடிப்பினால் பலரையும் ஈர்த்தவர்.

தனது காதலனை கரம்பிடிக்க நினைக்கும் நாயகி. தடையாக இருக்கும் காதலனின் அம்மா. அம்மா பிள்ளையாகவே இருக்கும் நாயகன் ஆகிய கதாப்பாத்திரங்களைச் சுற்றி இந்த கதை நகர்கிறது.

மாபெரும் வெற்றித் தொடரான அழகி தொடரை இயக்கிய தினேஷ் இந்த தொடரையும் இயக்குவதனால் வெளியாவதற்கு முன்பே இதற்கு எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

பல முன்னணி நட்சத்திரப் பட்டாளங்களுடன் இந்தத் தொடர் வருகிற திங்கள் முதல் மாலை 7 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

8 மணிக்கு விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலிலும் பார்க்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com