இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ரன்வீர் சிங். இவர் பாலிவுட் திரைப்படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இவர் 2010-ம் ஆண்டு ஹிந்தியில் "பேண்ட் பஜா பாராத்" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவரது நடிப்பிற்கான அங்கீகாரமும், விருதுகளையும் பல பெற்றுள்ளார்.
ரன்வீர் சிங் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். இதற்கிடையில் ரன்வீர் சிங் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நீண்ட நாட்களாகக் காதலித்து பின்னர் கடந்த 2018 ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
ரன்வீருக்கு ஸ்டைலான மற்றும் வித்தியாசமான உடை அணிவது மிகவும் பிடிக்கும். பார்ப்பதற்கு சில நேரம் வேடிக்கையாக இருந்தாலும் அவரது ஸ்டைலான உடைக்காகவும் அவரது புதிய தோற்றத்திற்காகவும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் ரன்வீர் சிங் சமீபத்தில் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாண மாடலாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினார். ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படங்களுக்கு சிலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Myntra ரன்வீர் சிங்கின் அதே புகைப்படத்தை ஆடை அணிந்தது போன்று எடிட் செய்து வெளியிட்டுள்ளது.
அதில் ரன்வீர் சிங் ரோஜாப்பூ அச்சிடப்பட்ட வெள்ளை நிற சட்டையுடன் சிவப்பு நிற பேண்ட் அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து 'fixed it' என்ற தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளது.
இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust