கடந்த மார்ச் மாதம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய சினிமாவில் முக்கியமான படமாகப் பார்க்கப்பட்டது. எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய அந்த படத்தை கிண்டல் செய்தது தற்போது இணையத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ஆஸ்கர் வென்ற ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் சிறந்த ஒலி வடிமைப்புக்காக ஆஸ்கர் வென்றவர் ரசூல் பூக்குட்டி. இவர் ஆர்ஆர்ஆர் படம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்களின் காதல் திரைப்படம் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் சாதனைப் படைத்தது. இதனை "நான் ஆர்ஆர்ஆர் என்ற 30 நிமிட குப்பையைப் பார்த்தேன்" என ஒருவர் ட்வீட் செய்ய அதில், "அலியா பட் ஒரு துணைப்பொருள் (Prop)" என்று அவர் கமென்ட் செய்தார்.
மற்றொரு ட்வீட்டில், "ஓரினச்சேர்க்கை காதல் திரைப்படம்" எனக் கூறியிருக்கிறார்.
"ஒரு ஓரினச்சேர்க்கையாளருக்கு தான் ஓரினச்சேர்க்கை காதல் என்று தெரியும்" என ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.
மற்றொருவர், "ஹோமோஃபொபிக் அலர்ட், இவர் ஒரு படத்தை Gay Film என்று கூறி கிண்டல் செய்வதால் மொத்த Gay மக்களையும் இழிவு செய்கிறார்" என்று கமென்ட் செய்தார்.
ஆர்ஆர்ஆர் படத்தை மேற்கு நாடுகளில் உள்ள சில ரசிகர்களும் Gay காதல் திரைப்படமெனக் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல விருதுகளைப் பெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust