Salman Khan Weds Sonakshi Sinha : சல்மான்கானுக்கும் சோனாக்‌ஷிக்கும் திருமணமா? உண்மை என்ன?

இந்தப் புகைப்படங்களின் பின்னணி என்ன? இதுவரை யாரும் பார்க்காத படங்களின் உண்மை நிலை என்ன? இந்தக் காலத்தில் சல்மான் கானை தெரியாதவர்கள் இல்லை. அவர் மான்கள் விஷயத்திலும் சரி; பெண்கள் விஷயத்திலும் சரி; மிகப் பிரபலமானவர்.
Salman Khan

Salman Khan

NewsSense

இந்தப் புகைப்படங்களின் பின்னணி என்ன? இதுவரை யாரும் பார்க்காத படங்களின் உண்மை நிலை என்ன? இந்தக் காலத்தில் சல்மான் கானை தெரியாதவர்கள் இல்லை. அவர் மான்கள் விஷயத்திலும் சரி; பெண்கள் விஷயத்திலும் சரி; மிகப் பிரபலமானவர்.

முழுத் திரையுலகிலும் அவரின் புகழும் பெயரும் தனி ரீச்தான். ஒட்டுமொத்த திரையுலகும் அறிந்த ஒரு பிரபலம் என்றால், அது சல்மான்கான்தான். இப்போதைய சூழ்நிலையிலும் சல்மான் கானுக்குப் பணம் தொடர்பாக எந்தவித சிக்கலும் இல்லை. அவர் படங்கள் மூலம், ஹிட் கொடுத்ததன் மூலம் அதிகமாகச் சம்பாதித்த முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். இதன் காரணமாக இவரது வாழ்க்கையும் ஆடம்பரமான வாழ்க்கைதான். சமூக ஊடகங்களில் வைரலாக இருப்பவர் சல்மான் கான், காரணம் இவரின் திருமணத்துக்கான தலைப்பு செய்திகளுக்காகவே… இவரின் திருமணத்துக்கான ஹாட் நியூஸூக்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.

தற்போது மீண்டும் சோசிஷியல் மீடியாவில் தலைப்பு செய்தியாகி வைரலாகி இருக்கிறார். ஏனெனில், சமீபத்தில் சல்மான் கான் மணமகன் உடையில் இருக்கும் புகைப்படமும் மணமகளுக்கு மோதிரம் அணியும் புகைப்படமும் வெளிவந்துள்ளது. அதை நீங்களே இந்தப் புகைப்படத்தின் மூலம் பார்க்கலாம். சல்மான்கானுடன் புகைப்படத்தில் மணமகளாக இருப்பவர், வேற யாருமல்ல பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹாதான். சல்மான் கான் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹாவின் புகைப்படங்கள் அதிகமாக வைரலாகி வருகின்றன. இதனால், சல்மான் கான் யாருக்கும் தெரிவிக்காமல் சோனாக்‌ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார் என மக்கள் கூறுகிறார்கள்.

சோனாக்‌ஷி சின்ஹா பாலிவுட்டின் நட்சத்திர நடிகைகளில் ஒருவர், அவரின் படங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே சூப்பர்ஹிட்தான். சோனாக்‌ஷி சின்ஹாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொன்னால், அவர் பாலிவுட்டின் மிக பெரிய ஸ்டார் குடும்பத்துக்கு மருமகளாக மாறப் போவதாக நீண்ட நாட்களாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் செய்தியால், சல்மான் கானும் சோனாக்‌ஷி சின்ஹாவும் அழகான சிவப்பு நிற திருமண ஆடைகளோடு மாப்பிள்ளையாகவும் மணப்பெண்ணாகவும் இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்த போட்டோக்களில் சோனாக்‌ஷி சின்ஹாவின் மாப்பிள்ளையாக இருப்பது, சல்மான் கான்தான். இதனால், தற்போது சோனாக்‌ஷி சின்ஹாவும் சல்மன்கானும் மட்டும் திருமணம் பற்றிப் பேசி வருவதாகவும் யாருக்கும் தெரிவிக்காமல் சோனாக்‌ஷி சின்ஹாவும் சல்மன்கானும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>Salman Khan</p></div>
Salman Khan सलमान ख़ान : Latest Popular and Viral Photos | Visual Story
<div class="paragraphs"><p>சல்மான் கான்&nbsp;</p></div>

சல்மான் கான் 

NewsSense

இந்தப் படங்களின் பின்னால் உள்ள உண்மை என்ன?

சோனாக்ஷி சின்ஹா மற்றும் சல்மான் கான் தற்போது அவர்களின் திருமணப் புகைப்படத்தால் தலைப்புச் செய்தியாக உள்ளனர் என்பது வைரலான செய்தி. இதன் காரணமாகத் தற்போது அனைவரும் அவர்களைப் பற்றியே பேசுகிறார்கள். சமீபத்தில் சல்மான் கான் மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் திருமணத்தின் ஒரு படம் வெளியானது. இந்தப் படத்தின் உண்மையைப் பற்றிச் சொன்னால், இது கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்பட்ட படம். அதாவது, சல்மான் கானுக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கும் திருமணம் ஆகவில்லை. மேலும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், சோனாக்ஷி சின்ஹா மற்றும் சல்மான் கான் திருமணப் படங்கள் உண்மையானவை அல்ல என்பதும் முழுமையான விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் சல்மான் கானின் திருமணம் உண்மையல்ல. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ​​இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது, ஆனால் இது எடிட் செய்யப்பட்டவை. இந்தப் புகைப்படங்கள் உண்மையானதல்ல.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com