பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத், மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
திரைபிரபலங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிற துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சினிமா வாய்ப்பு எப்போது வேண்டுமாலும் குறையலாம் என்பது தான்.
ரியல் எஸ்டேட் தொடங்கி பேஷன் நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சஞ்சய் தத், இந்தியாவில் மதுபான வகைகளை இறக்குமதி செய்வதற்கும், சில்லறை விற்பனை செய்வதற்கும் அல்கோபெவ் ஸ்டார்ட்அப் கார்டெல் & பிரதர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் Living Liquidz, Drinq Bar Academy மற்றும் Morgan Beverages ஆகியவற்றுடன் இணைந்து இயங்குகிறது.
அல்கோபெவ் ஸ்டார்ட்அப் கார்டெல் & பிரதர்ஸில் முதலீடு செய்து தி க்ளென்வாக் என்ற ஸ்காட்ச் விஸ்கியை சஞ்சய் தத் அறிமுகம் செய்துள்ளார்.
க்ளென்வாக் விஸ்கி ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. இதில் இந்திய தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியாவில் விலை 1,550 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் தத், “இந்திய நாட்டில் விஸ்கிக்கு ஒரு பெரிய சந்தை உள்ளது. உலகளவில் இந்தியா மிகப்பெரிய விஸ்கி நுகர்வோர்களை கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது மிக நீண்டகால சிந்தனையாக இருந்தது. விஸ்கி குடிப்பதற்கு சாஃப்டாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதேபோல் சரியான விலையில் இருக்க வேண்டும். அனைவரும் எளிதாக அணுகக் கூடிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனவும் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust