தங்கம் மனம் கொண்ட சிங்கம் டா தனுஷ்... பாசத்தை அள்ளி தெளிக்கும் அண்ணன் செல்வராகவன்

இவ்வளவு நாள் இந்த பொன்னான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனுஷ் குறித்து அவரின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Naane varuven
Naane varuventwitter

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நானே வருவேன்'. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, இந்துஜா, எல்லி அவுரம் ஆகியோர் இணைந்துள்ளனர். நானே வருவேன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஒரே நேரத்தில் 'வாத்தி' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக கால்ஷீட் கொடுத்து வரும் தனுஷ் மூன்றாவதாகத் திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங்கும் பேசி வருகிறார்.

dhanush - selvaraghavan
dhanush - selvaraghavantwitter

இந்நிலையில் தனது ட்விட்டரில் செல்வராகவன் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் நீண்ட காலமாக நாங்கள் இருவரும் தங்களின் வேலையில் பிஸியாக இருந்ததால், ஒருவரோடொருவர் சேர்ந்து நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நானேவருவேனில் இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தனுஷ் தங்க மனம் கொண்ட சிங்கம்' என்று தன்னுடைய பாசத்தை அள்ளி தெளித்துள்ளார்.

Naane varuven
அட இது தெரியாம போச்சே: வீக் எண்ட் - இங்க போக பிளான் பண்ணிகோங்க
dhanush - selvaraghavan
dhanush - selvaraghavantwitter

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என இளசுகளின் மனதைக் கொள்ளையடித்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு 'நானே வருவேன்' படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை இன்னும் கூடுதலாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com