சைலண்ட் மோடுக்கு மாறிய ஷபானா - ஆர்யன் ஜோடி - காரணம் இதுதானா?

நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஆர்யன் - ஷபானா ஜோடியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலானது. ஷபானாவின் நெருங்கிய தோழி ரேஷ்மாவின் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.
Shabana - Aryan
Shabana - AryanTwitter
Published on

திருமணமான சில மாதங்களிலேயே சமூக வலைத்தளங்களுக்கு குட் பை சொல்லி விட்டார் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன். ஷபானாவும் பெரிதாக இன்ஸ்டா பக்கம் வருவதில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஆர்யன் - ஷபானா திருமணம் நடந்து முடிந்தது.

பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல், இ.சி.ஆர் ரெசார்ட் ஒன்றில் ஒரு சில நண்பர்கள் மட்டும் இருக்க, திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் இந்து முறைப்படியும் இல்லாமல், இஸ்லாமிய முறைப்படியும் இல்லாமல், வயதான பெண் ஒருவர் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, ஆர்யன் வீட்டில் திருமணத்தில் விருப்பமில்லாததால் பிரச்சனை செய்வதாக செய்திகள் பரவின. ஆனால் அவை அனைத்தும் வதந்தி என்று ஆர்யன் தரப்பில் கூறப்பட்டது. அதன் பிறகு இந்த ஜோடி குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் ஆர்யன் சமூக வலைத்தளங்களில் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

Shabana - Aryan
Shabana - AryanTwitter

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆர்யன் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். திடீரென செழியன் கதாபாத்திரத்தில் இருந்து ஆர்யனை நீக்கியது சீரியல் குழு. இது குறித்து ஆர்யனும் எந்த தகவலும் இன்ஸ்டாவில் பதிவிடவில்லை.

செம்பருத்தி சீரியலில் பிஸியாக இருக்கும் ஷபானா, அவ்வப்போது இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். ஆனால் முன் போல் பெரிதாக இன்ஸ்டா பக்கம் வருவதில்லை.

நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஆர்யன் - ஷபானா ஜோடியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலானது. ஷபானாவின் நெருங்கிய தோழி ரேஷ்மாவின் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. ஷபானாவும் ரேஷ்மாவும் ஒரே மாதிரி உடை அணிந்து, பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ரேஷ்மாவின் கணவர் மதன், ஷபானா, ஆர்யன் ஆகியோரின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Shabana - Aryan
Shabana - AryanTwitter
Shabana - Aryan
Manju Warrier : கடத்தப்பட்டாரா அசுரன் பட நடிகை? - இயக்குநர் பதிவால் பரபரப்பு

மேலும் ஆர்யன் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் நாயகனாக கமிட் ஆகி இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் வட்டம் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை. விஜய் டிவியில் சீரியல் விட்டு நீக்கப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு ஜீ தமிழ் அடைக்கலம் கொடுத்து, புது சீரியலும் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com