"நான் தான் முதலில் காதலை சொன்னேன்" - ஸ்ருதி ஹாசன்

நடிகையும், கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.இருவரும் தங்களது காதலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியுலகிற்கு அறிவித்தனர். தற்போது அதனை மீண்டும் இருவரும் உறுதிபடுத்தியுள்ளனர்.
Shruti Hassan with her Boy Friend

Shruti Hassan with her Boy Friend

Twitter

Published on

நடிகையும், கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இருவரும் தங்களது காதலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியுலகிற்கு அறிவித்தனர். தற்போது அதனை மீண்டும் இருவரும் உறுதிபடுத்தியுள்ளனர். இருவரும் சேர்ந்து மொபைல் ஆப் ஒன்றில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதிலளித்தனர். முதல் கேள்வியாக உங்களில் யாருக்கு காதலிக்க அதிக விருப்பம் இருந்தது என்று கேட்டதற்கு ஸ்ருதி தனது காதலனை கைகாட்டினார்.

<div class="paragraphs"><p>Shruti with her Boy friend</p></div>

Shruti with her Boy friend

Instagram

அதேசமயம் யார் முதலில் காதலை சொன்னது என்று கேட்டதற்கு, நான் தான் முதலில் காதலை சொன்னேன் என்று தெரிவித்தார். அதனை சாந்தனுவும் ஒப்புக்கொண்டார். ஒருவருக்கொருவர் யார் மீது அதிக பாதுகாப்புடன் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு ஒருவருக்கு ஒருவர் கைகாட்டிக்கொண்டனர். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஸ்ருதிஹாசனும், அதிகமாக சாப்பிடுவதில் சாந்தனுவும் அதிகமாக ஈடுபடுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இருவரில் அதிகமாக பணம் செலவிடுவதில் ஸ்ருதிஹாசனும் ஈடுபடுவதாகவும், யார் முதலில் வாக்குவாதத்தை தொடங்குவார்கள் என்று கேட்டதற்கு ஸ்ருதிஹாசன் என்றும் இருவரும் பதிலளித்தனர். முதலில் யார் தூங்க செல்வீர்கள் என்று கேட்டதற்கு சாந்தனு என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>Shruti with her Boy friend and Akshara</p></div>

Shruti with her Boy friend and Akshara

Instagram

சாந்தனு ஓவியராக இருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஸ்ருதிஹாசன் 2009ம் ஆண்டு லக் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கடைசியாக விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்தார். தற்போது வெப்சீரியல் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com