”நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது” புகைப்படத்தை பகிர்ந்த சித்தார்த் - அதிதி ஜோடி!

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வபோது பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
 ”நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது” புகைப்படத்தை பகிர்ந்த சித்தார்த் - அதிதி ஜோடி!
”நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது” புகைப்படத்தை பகிர்ந்த சித்தார்த் - அதிதி ஜோடி!Twitter

ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் சித்தார்த், தொடர்ந்து பாய்ஸ், உதயம் NH4, நூற்றெண்பது, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. அதிதி ராவ் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வபோது பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தங்களுக்கு நிச்சயம் நடந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு, ரசிகர்களின் குழப்பத்தை தீர்த்துள்ளனர்.

 ”நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது” புகைப்படத்தை பகிர்ந்த சித்தார்த் - அதிதி ஜோடி!
சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்காததற்கு இதுதான் காரணம் - நடிகர் சித்தார்த் என்ன சொல்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com