சிம்பு : இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோவர்கள் பெற்ற முதல் தமிழ் நடிகர்

கடந்த 20200ம் ஆண்டு இன்ஸ்டாவில் இணைந்த நடிகர் சிம்பு 10 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சிம்பு
சிம்புTwitter
Published on

இன்றைய உலகில் ஒருவரின் பிரபலத்துவத்தை கணக்கிடும் முறையாகவே இன்ஸ்டாகிராம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2k கிட்ஸ்களின் ஆதரவு இன்ஸ்டாவில் இருப்பவர்களுக்கு தான் கிடைக்கிறது எனலாம்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது சினிமா நாயகர், நாயகிகளின் மற்றொரு வேலையாகவே இருக்கிறது எனலாம்.

அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு இன்ஸ்டாவில் இணைந்த நடிகர் சிம்பு 10 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அக்டோபர் 20, 2020ல் இன்ஸ்டாவில் இணைந்தார் சிம்பு. திரை வாழ்கையிலும் அவர் அப்போது தான் கம்பேக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், சிம்புவின் #Atman வீடியோ ஹிட் அடித்தது.

ஈஸ்வரனைத் தொடர்ந்து வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அப்போது இன்ஸ்டாவிலும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்தனர்.

தற்போது சிம்புவுக்கு வெளியாகவிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் முதல் பார்வை அனைத்தும் ஹிட் ஆனதால் சிம்புவின் இன்ஸ்டாகிராமும் பிரபலமடைந்தது.

இப்போது முதல் கோலிவுட் ஹீரோவாக 10 மில்லியன் ஃபாலோவர்களைப் பெற்றுள்ளார்.

இதே நேரத்தில் மற்ற தமிழ் சினிமா நடிகர்களான தனுஷ் 4.8 மில்லியன் மற்றும் விஜய் சேதுபதி 5.5 மில்லியன் ஃபாலோவர்களைப் பெற்றுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com