"எனக்கா Red Cardu?" சிம்பு உட்பட 5 நடிகர்களுக்கு தடை விதிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்?

அந்த பட்டியலில் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா, நடிகர்கள் விஷால், சிம்பு, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்
"எனக்கா Red Cardu?" சிம்பு உட்பட 5 நடிகர்களுக்கு தடை விதிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்?
"எனக்கா Red Cardu?" சிம்பு உட்பட 5 நடிகர்களுக்கு தடை விதிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்? twitter

நடிகர்கள் சிம்பு, விஷால் உட்பட 5 தமிழ் நடிகர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. என் ராமசாமியின் தலைமையில் நடைப்பெற்ற கூடத்தில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது.

அப்போது தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு படப்பிடிப்பிற்கும் டப்பிங்கிற்கும் தேதிகள் ஒதுக்கவில்லை என்று ஐந்து நடிகர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன. இவர்களின் ஒத்துழையாமையின் காரணமாக நடிகர்களுக்கு ரெட் கார்ட் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக நடிகர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த பட்டியலில் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா, நடிகர்கள் விஷால், சிம்பு, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது . நடிகர்களின் பெயர்கள் உறுதி செய்யப்படும் நிலையில், அவர்களின் படங்களுக்கு சங்கம் ஒத்துழைப்பு வழங்காது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

"எனக்கா Red Cardu?" சிம்பு உட்பட 5 நடிகர்களுக்கு தடை விதிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்?
Ajith Kumar: 'AK Moto Ride' பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்!

சங்கத்தினர் முன்வைத்துள்ள ஐவருடனும் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யும் முன்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே அறிக்கையின்படி, நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விளக்கம் பெற நடிகர் சங்கத்திடம் கூறப்பட்டுள்ளது, அந்த பதில்களை வைத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தில் நிதியை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

நடிகர் சிம்புவுக்கு ஏற்கனவே ஒரு முறை ரெட் கார்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

"எனக்கா Red Cardu?" சிம்பு உட்பட 5 நடிகர்களுக்கு தடை விதிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்?
Varisu : சிம்பு வாய்ஸ், விஜய் டான்ஸ்! STR குரலில் விஜய்யின் அடுத்த பாடல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com