திருமூர்த்தி - கமல்ஹாசன்
திருமூர்த்தி - கமல்ஹாசன் Twitter

விக்ரம் : கமலுக்கு நன்றி தெரிவித்த பாடகர் திருமூர்த்தி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

நன்றி தெரிவிக்கும் விதமாக விக்ரம் படத்தில் இடம்பெற்ற ”பத்தல பத்தல” பாடலை பியானோவில் இசைத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Published on

ஏ.ஆர். ரஹ்மானின் KM இசைப்பள்ளியின் படிப்பு செலவை கமல்ஹாசன் ஏற்றதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பாடகர் திருமூர்த்தி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ”பத்தல பத்தல” பாடல் சூப்பர் ஹிட்டானது.

பாடகர் திருமூர்த்தி
பாடகர் திருமூர்த்திTwitter

இந்த பாடலை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி தன்னுடைய குரலில் பாடி வீடியோ வெளியிட்டதையடுத்து, அவரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டினார் .

மேலும் திருமூர்த்தி இசை பயிற்சி பெறுவதற்கான செலவையும் கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டார். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசைப்பள்ளியில் திருமூர்த்தி பயிற்சி பெற உதவி செய்து உள்ளார். அதற்காக ஏ.ஆர் ரகுமானிடமும் பேசியுள்ளார்.

திருமூர்த்தி - கமல்ஹாசன்
லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச் - அனிருத்துக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விக்ரம் படத்தில் இடம்பெற்ற ”பத்தல பத்தல” பாடலை பியானோவில் இசைத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமூர்த்தி - கமல்ஹாசன்
நா.முத்துகுமார்: கவிதைக்காரனின் கடலில் இருந்து சில துளிகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

logo
Newssense
newssense.vikatan.com