SK20 :வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் - சத்யராஜ்

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிவாகார்த்திகேயன் மற்றும் சத்தியராஜ் இந்த படத்தில் இணைவது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
படக்குழு

படக்குழு

Twitter

Published on

டான் - அயலான் படங்கள் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தை ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் கேவி இயக்குகிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்கியது.

<div class="paragraphs"><p>சிவகார்த்திகேயன்</p></div>

சிவகார்த்திகேயன்

Twitter

இன்று காலையில் நடந்த படத்தின் பூஜை நடந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் சத்யராஜ் இணைந்திருக்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் - சத்யராஜ் காம்போ காமடியில் கலைகட்டியிருக்கும். 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இந்த படத்தில் இணைவது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

<div class="paragraphs"><p>படக்குழு</p></div>

படக்குழு

Twitterர்

சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் ஹலமதி ஹபிபோ - அரபிக் குத்து பாடலின் ப்ரோமொ வெளியாகி வரவேற்பை பெற்றது. கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். தான் எழுதும் பாடல்களுக்கு வாங்கும் பணத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் குடும்பத்துக்கு சிவா வழங்கிவருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் நெட்டிசன்களும். சினிமா ரசிகர்களும். நா.முத்துகுமாரின் ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com