நடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறையினர் சோதனை - 15 நாட்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ்

ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்களின் புகாரின் பேரில் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சூரி
நடிகர் சூரிTwitter
Published on

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்து வருகின்றனர்.

பரோட்டா நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சூரி. இவரை ரசிகர்கள் பரோட்டா சூரி என்றும் அழைப்பார்கள். தற்போது முன்னணி நடிகர்களுடன் சூரி நடித்து வருகிறார்.

அம்மன் உணவகம் என்ற பெயரில் மதுரையில் இவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

சூரியின் அம்மன் உணவகத்தில், ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்களின் புகாரின் பேரில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையில் அவரது உணவகத்திற்காக மொத்தமாக வாங்கப்பட்ட பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாததால் நடிகர் சூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் சூரி
பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com