வாடிவாசல்: மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட சூர்யா - வெளியான வீடியோ

’மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’ - வெளியானது மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட சூர்யா வீடியோ
Suriya
SuriyaTwitter
Published on

நடிகர் சூர்யாவின் 47-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டுமின்றி நேற்று சூர்யாவிற்கு சூரரைப்போற்று படத்திற்காகத் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில், வாடிவாசல் படத்திற்கான சில நிமிட காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள அந்த வீடியோ டீசர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீடியோ பெரிதாக இல்லாத காரணத்தால், ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள்.

வாடிவாசல்

வாடிவாசல் படம் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.

1959 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளிவந்த இப்புத்தகம், இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போகும் வகையிலான வார்த்தைகளாலும் , வட்டார மொழியின் வீச்சு சற்றும் குறையாமலும் படைக்கப்பட்டிருப்பது இதன் வெற்றி. அதுதான், கடந்த ஆண்டு அதன் 16ம் பதிப்பாக இப்புத்தகத்தை மறுபிரசுரம் வரை கடத்திக் கொண்டு வந்திருக்கிறது.

மதுரைக்காராரான சி.சு.செல்லப்பா இந்த வாடிவாசலை வார்த்தைகளால் எழுதியிருக்கிறார் என்பதை விட வாடிவாசலிலேயே வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. தன்னுடைய முன்னுரையில் இப்படி எழுதியிருப்பார் செல்லப்பா; ‘ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும், மனுசனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல்’...

ரசிகர்களின் சில ட்வீட்கள்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com