சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது. விஜய் டிவி கண்ணம்மாவா சன் டிவி சுந்தரியா என்று ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. `பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகியது அந்த சீரியல் குழுவுக்கு ஒரு சின்ன சறுக்கலை ஏற்படுத்திவிட்டது. ஆனால் `சுந்தரி’ சீரியல் தொடக்கம் முதலே ஒரே நேர்கோட்டில் ஹிட் அடித்து வருகிறது. வித்தியாசமான கதைகளம், புதிய முகங்கள் இவை தான் சீரியலின் முக்கிய அம்சங்கள்.
சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரியல்லா செல்லஸ் டிக் டாக்கில் செம பிரபலம். தியேட்டர் ஆர்டிஸ்ட், நடிப்பு மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்றாலும் அவர் பிரபலமானது சமூக வலைதளங்கள் வாயிலாக தான். பொதுவாக சீரியல் நடிகைகள் தங்கள் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்தெல்லாம் இன்ஸ்டாவில் பகிர மாட்டார்கள். தான் உண்டு தன் இன்ஸ்டா பிஸ்னஸ் உண்டு என்று தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் கேப்ரியல்லா கொஞ்சம் வித்தியாசமானவர். சுந்தரி சீரியல் ப்ரோமோ மற்றும் எபிசோடுகள் யூ டியூபில் ட்ரெண்டாகும் போதெல்லாம், தன் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கும், தன் சீரியல் குழுவுக்கும் நன்றி தெரிவித்து சின்ன சின்ன டெக்னீசியன்ஸ் உட்பட அனைவரையும் டேக் செய்து நன்றி தெரிவிப்பார். இதனால் அவருக்கு ரசிகர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
சீரியல் மட்டுமின்றி தியேட்டர் ஃபேக்டரி’ என்ற நாடகக் குழுவை நடத்தி வரும் கேபி, அண்மையில் பகிர்ந்த வீடியோ செம வைரல். கடந்த வாரம் தஞ்சாவூரில் உள்ள ஒரு கோயிலுக்கு கேபி சென்றிருக்கிறார். அங்கு ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு பாராட்டு மழையை பொழிந்திருக்கின்றனர். இது குறித்து தன் இன்ஸ்டாவில் பதிவிட்ட கேபி, ``இதே திருபட்டூர் பிரம்மன் கோவிலுக்கு 9 வருஷத்துக்கு முன்னாடி, நான் வந்து கேட்டது "எந்த துணையும் இல்லாம மனசுல நம்பிக்கையும் திறமை வச்சுட்டு சென்னைக்கு கிளம்புறேன், எவ்ளோ ஏமாற்றதுலயும் முன் வச்ச அடிய பின் வைக்காம என்னைய கொண்டு போனு வேண்டிருக்கேன், அதே கோவில அதுக்கான பதில நேரா வந்து காட்டிருச்சு மக்கள் தான் உன்னோட கலைக்கான பதில்னு"என்றும் கடமை பட்டு இருக்கிறேன்எனது தாய்க்கும்எனது சுந்தரி குழுவிற்கும்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
அழகு, திறமை, புகழ் இவற்றையெல்லாம் தாண்டி, அடிக்கடி ரசிகர்களுக்கும், சீரியல் குழுவுக்கும் நன்றி சொல்லும் இந்த அணுகுமுறை மற்ற நாயகிகளிடம் இருந்து கேப்ரியல்லா-ஐ தனித்து காட்டுகிறது.