பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவியை பாராட்டிய ரஜினி - நெகிழ்ச்சியில் நடிகர் பகிர்ந்த ட்வீட்!

மேலும், இந்த பாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என செய்திகள் வெளியான போது, அவரது உடல்வாகு, மற்றும் குரலை வைத்து நிறைய கேலிகளும், விமர்சனங்களும் எழுந்தன.
ஜெயம் ரவியை பாராட்டிய ரஜினி
ஜெயம் ரவியை பாராட்டிய ரஜினிtwitter
Published on

பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு நடிகர் ஜெயம் ரவியை அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் வெளியாகி உலகளவில் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவு படமான பொன்னியின் செல்வனுக்கு, மக்கள் மட்டும் இல்லாமல் நடிகர்களும் காத்திருந்தனர்.

பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மனாக (பொன்னியின் செல்வன்) நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். படத்தின் பாதியில் தான் ஜெயம் ரவி தோன்றுகிறார். அவர் தோன்றும் சிறிய இடைவெளியில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக படம் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

மேலும், இந்த பாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என செய்திகள் வெளியானபோது, அவரது உடல்வாகு, மற்றும் குரலை வைத்து நிறைய கேலிகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், படம் வெளியான பிறகு, அந்த விமர்சனங்களுக்கு தனது நடிப்பின் மூலம் ரவி பதிலடி கொடுத்துள்ளார் என கருத்துகள் வெளியாகின.

இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொலைப்பேசியில் அழைத்து ஜெயம் ரவியை, அவரது நடிப்பை பாராட்டியுள்ளார். இந்த தகவலை ஜெயம்ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "உங்களுடனான அந்த ஒரு நிமிட உரையாடல் என் நாளை, எனது இந்த வருடத்தை அழகாக மாற்றியுள்ளது. எனது கெரியருக்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா! I’m overwhelmed, humbled & blessed to know you loved the movie & my performance" எனக் கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதும், அவரை முன்னொரு முறை வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவேண்டும் என பேச்சுக்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியை பாராட்டிய ரஜினி
Ponniyin Selvan: “பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தை நான் கேட்டேன்” - ஆடியோ லாஞ்சில் ரஜினி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com