விக்ரம் முதல் லவ் டுடே வரை : தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியுள்ளதா 2022ன் திரைப்படங்கள்?

இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான முக்கியப்படங்களாக விக்ரம், பொன்னியின் செல்வன், லவ் டுடே ஆகியவை அமைந்தன. தமிழ் சினிமாவின் போக்கு இந்த ஆண்டில் எப்படியிருந்தது? 2023 இந்த 'நல்ல நிலையின்' தொடர்ச்சியாக இருக்குமா?
வலிமை முதல் லவ் டுடே வரை: தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தந்ததா 2022?
வலிமை முதல் லவ் டுடே வரை: தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தந்ததா 2022?Twitter
Published on

இந்த ஆண்டின் முதல் பாதி தமிழ் சினிமாவுக்கு பெரும் சொதப்பலாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் நம்பிக்கையும் புத்துணர்வும் அளித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவின் போக்கு இந்த ஆண்டில் எப்படியிருந்தது? 2023 இந்த 'நல்ல நிலையின்' தொடர்ச்சியாக இருக்குமா?

இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான முக்கியப்படங்களாக விக்ரம், பொன்னியின் செல்வன், லவ்டுடே படங்கள் அமைந்தன.

சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் 3 படங்களும் கும்பல் கும்பலாக ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தன.

பெரிய நட்சத்திரங்கள் நடித்த பீஸ்ட், வலிமை படங்கள் வசூல் ரீதியில் 200 கோடியைக் கடந்து கவனிக்க வைக்கின்றன.

தவிர, எதற்கும் துணிந்தவன், வெந்து தணிந்தது காடு, திருச்சிற்றம்பலம் மற்றும் விருமன் படங்களின் வெற்றியும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

கோவிட் ஊரடங்கு காரணமாக 2020 மற்றும் 21 ஆண்டுகள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் மோசமானதாக அமைந்தன.

டாக்டர், மாஸ்டர் என வெகு சில படங்கள் மட்டுமே திரையரங்கில் வெற்றி பெற்றன. பெரும்பாலான படங்கள் நேரடியாகவே ஓடிடியில் வெளியாகின. ஆனால் 2022ன் முதல் பகுதி இன்னும் மோசமாக சென்றது.

Beast
BeastTwitter

திரையரங்கில் வந்த படங்கள் எதுவுமே ஒரு வாரம் கூட தாங்காமல் சென்று கொண்டிருந்தது.

வீட்டில் சௌகரியமாக இருந்து கொண்டு நினைத்த நேரத்துக்கு இன்டர்வெல் விட்டு படம் பார்க்கும் மக்காள் இனி திரையரங்குகள் பக்கம் எட்டிப் பார்ப்பதே அதிசயம் தான் எனப் பேச்சுகள் போய்க்கொண்டிருந்த போது பிப்ரவரியில் வலிமைத் திரைப்படமும் ஏப்ரலில் பீஸ்ட் திரைப்படமும் ரசிகர்களை திரையரங்க கொண்டாட்டத்துக்கு ஊக்குவித்தன.

இரண்டு படங்களுமே விமர்சன ரீதியில் மோசமாக பேசப்பட்டாலும் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை திருப்பிக் கொடுத்ததனால் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தன.

இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200-ஐ நெருங்குகிறது. மேலும் சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் விமர்சன ரீதியிலும் வசூலிலும் சக்கை போடு போட்டது கன்னட படமான கேஜிஎஃப் 2.

இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளை கேஜிஎஃப் 2, சார்லி, ஆர்ஆர்ஆர், காந்தாரா போன்ற அண்டை மாநில படங்களும் ஆண்டன என்பதையும் மறுக்க முடியாது.

KGF
KGF Twitter

2020, 21 கோடையில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர்களின் சீசன் டைமான சம்மர், இந்த ஆண்டும் கைக்கொடுக்காதது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

தமிழில் திரையுலகை நிலை நிறுத்த, விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்டது.

சரியாக ஜூன் மாதம் தியேட்டர்களின் கதவைத் தட்டியது விக்ரம் திரைப்படம்.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என நட்சத்திர கூட்டணி களமிறங்கியது. க்ளைமேக்ஸில் சூர்யா கேமியோவுக்கும் ரசிகர்களின் விசில் பறக்க படம் வரலாறு படைத்தது.

Vikram
VikramTwitter

இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் எல்.சி.யு என்ற சினிமாடிக் யூனிவர்ஸை உருவாக்கியதும் தமிழ் சினிமாவில் முதன் முறை நடந்தது.

அட்டகாசமான பின்னணி இசை, சுவாரஸ்யமான திரைக்கதை வடிவமைப்பு, பவர்ஃபுல்லான ஆக்ஷன் காட்சிகள், கச்சிதமான ஒளிப்பதிவு என 2கே கிட்ஸ்களுக்கான வெற்றிப்பட இலக்கணத்தை வகுத்துக்கொடுத்தது விக்ரம்.

விக்ரம் வெற்றி அலை ஓய்வதற்குள்ளாகவே பொன்னியின் செல்வன் குறித்த எதிர்பார்ப்புகள் கிளம்பின.

பொன்னியின் செல்வன் குறித்து ஒரு நாளுக்கு ஒரு செய்தியாவது ஊடகங்களில் வந்துகொண்டிருந்தன.

வெறெந்த படத்துக்கும் இல்லாத அளவு பெரும் எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வனுக்கு கிடைத்தது.

மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்ஸ் இல்லை என்றாலும் பரவலாக நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் இந்த படத்தில் இணைந்தனர்.

Ponniyin Selvan box office
Ponniyin Selvan box officeTwitter

ஜெயம் ரவி மற்றும் விக்ரம் ஆகியோரின் கெரியரில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பொன்னியின் செல்வன் அமைந்தது.

பொன்னியின் செல்வன் வெளியானதும் எதிர்மறை விமர்சனங்களே முதலில் பரவின.

நாவலை முழுவதாக படித்தவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை எனக் கூறினர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக நிலைத்தது.

நவம்பர் மாதம் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது.

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த தலைமுறையினரின் படம் என இதனைக் குறிப்பிடலாம்.

இந்த படத்தில் அறிமுக நட்சத்திரங்களே மிகப் பெரிய வெற்றியை சாத்தியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Love Today :
Love Today :Twitter

பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் இருந்தும் பல படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. மஹான், கோப்ரா, டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ், பிரின்ஸ், காஃபி வித் காதல் போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணங்கள்.

இதனால் கதையின் அழுத்தமும், திரைக்கதையின் விறுவிறுப்பும், தேர்ந்த சினிமா மொழியும் தான் வெற்றிக்கு அடித்தளம் என தமிழ் சினிமா உரைத்துள்ளது.

திரையரங்க வெற்றி மட்டுமே இனியும் ஒரே குறிக்கோளாக இருக்க முடியாது என்பதை வெப்சீரிஸ்கள் மற்றும் ஓடிடியில் வெளியான படங்களின் வெற்றி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

தமிழ் இயக்கத்தில் வெளிவந்த டாணாக்காரன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த சாணி காயிதம், கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கார்கி, கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அனல் மேலே பனித் துளி, மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த கடைசி விவசாயி, ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் வெளிவந்த ரத்த சாட்சி, தீபக் இயக்கத்தில் வெளிவந்த விட்னெஸ்  ஆகியப்படங்கள் ஓடிடியில் கவனம் ஈர்த்தன.

வலிமை முதல் லவ் டுடே வரை: தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தந்ததா 2022?
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்

ஓடிடியில் சிறிய பட்ஜெட், புதிய முகங்களைக் கொண்ட படங்களும் கொண்டாடப்படுகின்றன.

திரையரங்கம் அதற்கே உரிய மாறாத பாணியில் இயங்குகிறது.

இந்த வித்தியாசத்தை இந்த ஆண்டு தெளிவாக காணமுடிந்தது. இனி இதே வெற்றி பாதையில் தமிழ் சினிமா தொடர்ந்து பயணிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.

அடுத்த ஆண்டிலும் பல மிகப் பெரிய படங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. துணிவு, வாரிசு, இந்தியன் - 2, ஜெயிலர், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் என திரையரங்க கொண்டாட்டங்களுக்கு ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.

வலிமை முதல் லவ் டுடே வரை: தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தந்ததா 2022?
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-21: நீங்களும் நேரில் பங்கேற்கலாம்- என்ன செய்ய வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com