
Rajini
Sun Pictures
நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கும் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் ரஜினி நடிக்க உள்ள தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது.
NewsSense
ரவிக்குமாரா நெல்சனா?
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ள செய்தி சில நாட்களுக்கு முன் வெளியானது.
இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறி உள்ளதாகவும். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு இயக்குநரையும் இறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் நெல்சன் இயக்க உள்ள செய்தி வெளியாகி உள்ளது.
எப்படி உருவானது இந்தக் கூட்டணி?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் டாக்டரால் உருவான கூட்டணி இது. ஆம், டாக்டர் திரைப்படம் பார்த்த ரஜினி நெல்சனை பாராட்டி உள்ளார். அப்போது தமக்கும் இது போன்று கதை செய்யும்படி கேட்டுள்ளார். இப்படியாகதான் இந்தக் கூட்டணி உருவாகி உள்ளது.
NewsSense
யாருக்கு எவ்வளவு சம்பளம்?
ரஜினிக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் என்றும், நெல்சனுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தேசிங்கின் கதைக்கும் ஓகே சொல்லி உள்ளார் ரஜினி.
ரஜினி திரைப்படம்
தற்போது, ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் தலைப்பு குறித்து எந்தத் தகவலையும் சன் நெட்வொர்க் நிறுவனம் வெளியிடவில்லை.