தளபதி 66 : பூஜையுடன் தொடங்கிய படபிடிப்பு, விஜய் - ராஷ்மிகா வைரல் கிளிக்ஸ்

விஜயின் 66 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. நடிகர் விஜய், இயக்குநர் வம்சி, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பூஜை போட்ட பின்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகாTwitter
Published on

இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

இதனை ராஷ்மிகா மந்தனா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, நீண்ட நாள் கனவு நிறைவேற இருப்பதாகவும், தான் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் தற்போது அவருடன் நடிக்க இருப்பது நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நெகிழ்ந்தார்.

இந்நிலையில் விஜயின் 66 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. நடிகர் விஜய், இயக்குநர் வம்சி, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பூஜை போட்ட பின்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதல் முறையாக விஜய் - வம்சி கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com