Billie Eilish : Oscars வென்ற உலகின் முதல் 2k kid பில்லி எலிஷ்

13 வயதிலிருந்து இசை உலகில் பயணிக்கும் பில்லி பாடிய Ocean Eyes என்ற பாடல் மிகப் பிரபலமானது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 100 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்கள் உள்ளனர்.
Billie Eilish
Billie EilishOscars
Published on


2கே கிட்ஸ் என்றால் மொபைலை தட்டிக்கொண்டு உடம்பைக் கெடுத்துக்கொண்டு ஊர் சுற்றுபவர்கள் என்ற வசைகளைப் புறந்தள்ளி 20 வயதில் ஆஸ்கார் வென்று சாதனைப் படைத்திருக்கிறார் ஒரு பெண்.

No Time to Die என்ற ஆங்கிலப் படத்தில் சிறந்த இசையமைப்புக்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதைப் பெற்று 21ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பில்லி எலிஷ். No Time to Die ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 2021-ல் வெளியான படம். இந்த படத்தின் இசை ரிலீஸ் முதலே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கிராமி அவார்ட்ஸ், எம்மி, கோல்டன் குளோப் எனப் பல விருதுகளை வென்றுள்ளது. இந்த உலக அளவிலான பெரிய விருதுகளை வென்ற 21ம் நூற்றாண்டின் குழந்தையாக மிளிர்கிறார் பில்லி.

Billie Eilish
Billie EilishTwitter

பில்லியும் அவரது சகோதரரும் இந்த விருதுகளைப் பகிர்ந்துகொண்டனர். அடிப்படையில் பாப் பாடகரான பில்லி அவரது சகோதரருடன் இணைந்து இசையமைத்து வருகிறார். “இந்த விருதினை நாங்கள் வாங்க இன்ஸ்பிரேஷனாக இருந்த எங்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என ஆஸ்கார் உரையில் தெரிவித்துள்ளார். 13 வயதிலிருந்து இசை உலகில் பயணிக்கும் பில்லி பாடிய Ocean Eyes என்ற பாடல் மிகப் பிரபலமானது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 100 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்கள் உள்ளனர்.

Billie Eilish
Oscar 2022 : CODA, DUNE, Encanto - ஆஸ்கரில் கவனம் ஈர்த்த படங்கள், விருதுப் பட்டியல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com