K Viswanath: இயக்குநர், ’கலாதபஸ்வி’ கே விஸ்வநாத் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராவார் கே விஸ்வநாத். இவரை கலாதபஸ்வி என்று அழைத்தது திரையுலகம். 1930 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர்.
K Viswanath
K ViswanathTwitter

பழம்பெரும் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆன கே விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஸ்வநாத், சிகிச்சைப் பலனின்றி, நள்ளிரவில் உயிரிழந்தார். இவருக்கு வயது 92.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராவார் கே விஸ்வநாத். இவரை கலாதபஸ்வி என்று அழைத்தது திரையுலகம். 1930 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர்.

இவரது கலைத்திறனைப் போற்றி, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த 2016ல் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்ற 48வது நபர் இயக்குநர் கே விஸ்வநாத்.

சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம் உள்ளிட்ட திரைக்காவியங்களை இயக்கியவர் கே விஸ்வநாத்.

ஒலிக் கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் விஸ்வநாத். ஆத்ம கௌரவம் படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கினார். 1965 முதல் சுமார் 50 படங்களை இயக்கியுள்ளார் விஸ்வநாத்.

1992ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சப்தபதி, சங்கராபரணம், சுவாதி முத்யம் உள்ளிட்ட 5 படங்களுக்கு தேசிய விருதுகளை இவர் வென்றிருக்கிறார்.

ஆந்திர அரசு விருதான நந்தி விருதுகளை 20 முறையும், 10 ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஸ்வராபிஷேகம், உத்தம வில்லன், லிங்கா, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஸ்வநாத்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com