வெற்றிமாறன்: "ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை" - ஆதரவும், எதிர்ப்பும்!

"திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதும், ராஜராஜ சோழனை இந்து மன்னராக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" வெற்றிமாறனின் கருத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் என்னென்ன?
வெற்றிமாறன்: ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை - ஆதரவும், எதிர்ப்பும்!
வெற்றிமாறன்: ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை - ஆதரவும், எதிர்ப்பும்!Twitter
Published on

தமிழ் ஸ்டூடியோ என்ற அமைப்பு நடத்திய திருமாவளவன் மணி விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசியது என்ன? அதற்கான எதிர்வினைகள் என்ன என்பதைக் காணலாம்.

திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு தமிழ் ஸ்டூடியோவின் அருண் மோ என்பவர் ஏற்பாடு செய்திருந்த குரும்பட மற்றும் ஆவணப்பட விழாவில் வெற்றிமாறன் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் ராஜராஜ சோழன் மற்றும் திருவள்ளுவர் குறித்துப் பேசியிருந்தது தான் தற்போதைய விவாதத்துக்கு காரணமாக இருக்கிறது.

என்ன பேசினார் வெற்றிமாறன்?

இயகுநர் வெற்றிமாறன் திருமாவளவனுடனான முந்தைய சந்திப்புகள் குறித்து அந்த மேடையில் நினைவு கூர்ந்தார். அப்போது அசுரன் படத்தில் அரசியல் ரீதியிலான பிழைகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காக திருமாவளவனைச் சந்தித்ததாக கூறினார். "சினிமாவில் தனி மனிதர்களால் சமூகத்துக்கு தீர்வு கிடைக்குமென்று சொல்லாதீர்கள். அந்த தவறு தொடர்ந்து நடைபெறுகிறது. அமைப்பாய் திரள வழி செய்யுங்கள்" என்று திருமாவளவன் கூறியதாக பேசிய வெற்றிமாறன், படம் பார்த்த பின்னரும் திருமாவளவன் அதே குற்றச்சாட்டை சொன்னதாக கூறினார்.

மேலும் திராவிட இயக்கங்கள் சினிமாவைக் கையிலெடுத்தது தான் தமிழகம் இன்றும் மத சார்பற்ற மாநிலமாக இருக்க காரணம் என்றும் வெற்றிமாறன் பேசினார்.

தொடர்ந்து பேசியவர், "திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதும், ராஜராஜ சோழனை இந்து மன்னராக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சினிமாவிலும் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். நம் அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம் விடுதலைக்காக போராட வேண்டுமென்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்." என்று பேசினார்.

வெற்றிமாறன்: ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை - ஆதரவும், எதிர்ப்பும்!
பொன்னியின் செல்வன் கற்பனை தானா? சோழர்கள் பற்றிய உண்மையை எப்படி தெரிந்துகொள்ளலாம்?

வெற்றிமாறனின் பேச்சை ஆதரித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், " எங்களது அருண்மொழிச் சோழனை இந்து மன்னர் என்பது வேடிக்கை. இதுவும் வள்ளுவருக்கு காவி பூசுவது மாதிரி தான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது. உலகத்துக்கே தெரியும் அவர் சைவ மரபினர் என்று" என பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

வெற்றிமாறனின் பேச்சை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், "தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் யாருமே இந்து இல்லை.

ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா?" என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் வெற்றிமாறன் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

வெற்றிமாறன்: ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை - ஆதரவும், எதிர்ப்பும்!
Crime Thriller Series பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுமா?- இளைஞர்களை எச்சரிக்கும் ஆய்வு!

மேலும் வானதி சீனிவாசனின் அறிக்கையில், "உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். அவருக்கு, 'சிவபாத சேகரன்', 'சோழ நாராயணன்', 'திருமுறை கண்ட சோழன்', 'உலகளந்தான்' என்று பல பெயர்கள் உண்டு.

இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா என்று உலகின் பல நாடுகளில், சிவலிங்க வழிபாடு வருவதற்கு சோழ அரசர்களே காரணம். சோழ மன்னர்கள் அரசாண்ட இடங்களில் எல்லாம், சிவபெருமானுக்கு மிகப்பெரும் ஆலயத்தை அமைத்தார்கள். கம்போடியாவிலுள்ள இந்து ஆலயம் தான் உலகத்திலேயே மிகப்பெரிய இந்து ஆலயம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பேரரசு வெற்றிமாறன் பேசியதனைக் கண்டித்துள்ளார். "வெற்றிமாறன் போன்று நாத்திகம் பேசுபவர்கள் மனிதர்களே இல்லை" என்றும் "வெற்றிமாறன் போலி நாத்திகம் பேசுகிறார்" என்றும் பேரரசு கூறியுள்ளார்.

வெற்றி மாறனுக்கு ஆதரவாகவும் மறுப்பாகவும் இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

வெற்றிமாறன்: ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை - ஆதரவும், எதிர்ப்பும்!
வந்தியத்தேவன் தவறாக சித்தரிக்கப்பட்டாரா? மணிரத்னம் மீது காவல்துறையில் புகார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com