Vettaiyan : வெளியானது தலைவர்170 டீசர் - மாஸ் லுக்கில் மிரட்டும் ரஜினிகாந்த் | Video உள்ளே

ரஜினியின் பிறந்த நாளையொட்டி இன்று அவரது 170ஆவது படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியும், அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170 ஆவது படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவருடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்

இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவரது 170 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது. ரஜினி 170ஆவது படத்திற்கு வேட்டையன் என படக்குழு பெயரிட்டுள்ளது.

logo
Newssense
newssense.vikatan.com