விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், முன்னதாக அவர் தற்கொலை குறித்து பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார் பேட்டை டிடிகே சாலையில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மூத்த மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
"பள்ளிக்குழந்தைகள் படிப்பினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. பள்ளி முடிந்து வந்த உடன் டியூசனுக்கு செல்கிறார்கள். இதனால் நாள் முழுக்க அவர்களுக்கு சிந்திக்க நேரமில்லாமல் போய் விடுகிறது. இதற்கு சுற்றி உள்ளவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.
குறிப்பாக பெற்றோர்கள். குழந்தைகளை பொருத்த வரைக்கும் அவர்களை கொஞ்சம் விட்டு விடுங்கள். நீங்கள் மற்றவர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் உங்களை காதலியுங்கள்" என்று பேசியிருந்தார்.
வைரலாகி வரும் மற்றொரு பழைய காணொலியில் தனது தந்தை தனக்கு 7 வயது இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் எனக்கு தெரியும். என்ன நடந்தாலும் தற்கொலை செய்துகொள்ள கூடாது என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp