விஜய் தேவரகொண்டாவை டேட் செய்ய விரும்பும் சாரா அலிகான் - விஜய் ரிப்ளே என்ன தெரியுமா?

கரண் ஜோஹர் அளித்த பார்ட்டியில் சாரா அலிகானும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டார்கள், அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
Vijay Deverakonda - Sara Ali Khan
Vijay Deverakonda - Sara Ali Khan Twitter
Published on

பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் பல மொழிகளை சேர்ந்த திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் நடிகைகள் சாரா அலிகான் மற்றும் ஜான்வி கபூர் கலந்து கொண்டனர்.

அப்போது கரண் ஜோஹர் சாராவிடம் இன்றே டேட் செய்ய வேண்டும் எனத் தோன்றும் ஒருவரின் பெயரை சொல்லுங்கள் என கேட்க, முதலில் இல்லை எனக் கூறும் சாரா அலிகான் பின்பு விஜய் தேவரகொண்டா பெயரைக் கூறுகிறார்.

அப்போது ஜான்வி சிரித்தார். முந்தைய காபிவித் கரண் சீசனில், ஜான்வி கபூர் தனக்கு விஜய் தேவரகொண்டாவை பிடிக்கும் எனக் கூறியிருந்தார்.

Vijay Deverakonda - Sara Ali Khan
விக்ரம் டு கங்குபாய் : 2022 -ல் அதிக பிரபலமான இந்திய திரைப்படங்கள் - IMDB Rating இதுதான்

இந்த நிலையில் சாரா அலிகானுக்கு பதிலளிக்கும் வகையில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் ப்ரோமோவைப் பகிர்ந்து, "நீங்கள் "தேவரகொண்டா" என்று அழகாகச் சொல்வது எனக்கு ரொம்ப பிடித்துள்ளது" என எழுதியதுடன் பெரிய ஹார்டினை வைத்து நடிகைகள் சாரா மற்றும் ஜான்வி இருவரையும் டேக் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரண் ஜோஹர் அளித்த பார்ட்டியில் சாரா அலிகானும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டார்கள், அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Vijay Deverakonda - Sara Ali Khan
ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியின் புதிய வீடு - விலை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com