விஜய் தேவரகொண்டா, சமந்தாவுக்கு விபத்தில் காயமா..? குஷி படக்குழு விளக்கம்

குஷி படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தாக தகவல்கள் வெளியானது.
Vijay Deverakonda - Samantha
Vijay Deverakonda - Samantha Twitter
Published on

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் குஷி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

குஷி படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தாக தகவல்கள் வெளியானது.

Kushi Team
Kushi TeamTwitter

ஆனால் குஷி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக வெளிவந்த செய்தியைப் படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இந்தச் செய்தியில் உண்மை இல்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் திரும்பினர். இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா, வெண்ணிலா கிஷோர் மற்றும் இயக்குனர் ஷிவா நிர்வாணா ஆகியோர் கொண்ட படத்தைப் பதிவிட்டு பொழுதுபோக்கிற்காக வேலைக்குச் செல்கிறேன் என்று cool - ஆக போஸ்ட் போட்டுள்ளார்.

குஷி திரைபடம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda - Samantha
"உடையை வைத்து தான் மதிப்பீடா?" பச்சை உடை விவகாரம், பதிலடி கொடுத்த சமந்தா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com