Vikram Trailer: வெளியானது கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த 'விக்ரம்' ட்ரெய்லர்

2 நிமிடம் 39 நிமிடங்களுக்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் கமல் ஹாசன், ஃபஹத், விஜய் சேதுபதி மூவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், "இந்த காட்ல அஸ்தமனத்தை பாக்கப்போறது யாருனு முடிவு பண்றது இயற்கை இல்ல நான் தான்" என வசனங்களில் மாஸ் காட்டியுள்ளார் கமல்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை அதிக இடங்களில் பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கும் கமல் முன்பு நடித்த விக்ரம் படத்தின் பெயரை தான் வைத்திருக்கின்றனர்.

ட்ரெய்லரில்...

2 நிமிடம் 39 நிமிடங்களுக்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் கமல் ஹாசன், ஃபஹத், விஜய் சேதுபதி மூவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், "இந்த காட்ல அஸ்தமனத்தை பாக்கப்போறது யாருனு முடிவு பண்றது இயற்கை இல்ல நான் தான்" என வசனங்களில் மாஸ் காட்டியுள்ளார் கமல்.

கமல் பேசும் மற்றொரு வசமான, "இந்த நேரத்துல வீரங்கல்லா என்ன சொல்லுவாங்க தெரியுமா" என்பது விருமாண்டி படத்தை நினைவுபடுத்துகிறது. இந்த அதிரடி ட்ரெய்லரால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியிருக்கிறது என்றால் மிகையாகாது.

logo
Newssense
newssense.vikatan.com