ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போஸ் கொடுத்த விஷ்ணு விஷால் - வைரலாகும் புகைப்படங்கள்

ரன்வீர் சிங்கை தொடர்ந்து, பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர், "நானும் இந்த டிரெண்டில் இணைகிறேன்...Almost" என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை எடுத்தது தனது மனைவி ஜுவாலா கட்டா தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்instagram
Published on

ரன்வீர் சிங்கை தொடர்ந்து தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாணப் படங்களை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பத்திரிக்கை ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் படுவைரலானது.

Ranveer Singh
Ranveer SinghTwitter

ஒரு பக்கம் ரன்வீரை எல்லோரும் புகழ்ந்தாலும், இன்னொரு புறம் அவருக்கு எதிர்ப்புகள் வந்துக்கொண்டு தான் இருந்தது. பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Myntra அந்த நிர்வாண புகைப்படத்திற்கு ஆடை அணிவித்து எடிட் செய்து அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

ஆனால், தற்போது இந்த டிரெண்ட் மற்ற நடிகர்களையும் கவர்ந்துள்ளது. ஆம்!

ரன்வீர் சிங்கை தொடர்ந்து, பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர், "நானும் இந்த டிரெண்டில் இணைகிறேன்...Almost" என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை எடுத்தது தனது மனைவி ஜுவாலா கட்டா தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பலரும் ரன்வீரின் தைரியத்தைப் பாராட்டியிருந்த நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா இதற்கு எப்படி ரியாக்ட் செய்தார் என்பது கேள்வியாக இருந்து வந்தது. எப்போதும் தனது கணவரின் எல்லா செயல்களுக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ள தீபிகா இந்த ஃபோட்டோஷூட் குறித்த பேச்சு எழுந்ததிலிருந்து புகைப்படங்கள் எடுத்து அது வெளியானது முதல், இப்போது வரை ரன்வீருக்கு பக்கபலமாக தான் இருக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.

இந்த காதல் ஜோடியின் அன்னியோனியத்தை மிஞ்சும் வகையில், விஷ்ணு விஷாலின் புகைப்படங்களை அவரது மனைவியே எடுத்துள்ளார் என்ற செய்தி இணைய வாசிகளைக் கவர்ந்துள்ளது

Vishnu Vishal- Jwala Gutta
Vishnu Vishal- Jwala Gutta

அவரவர் உடல் மீது அவர்களுக்கு நம்பிக்கை வேண்டும் என்பதே இது போன்ற நிர்வாண ஃபோட்டோஷூட் நடத்துபவர்களின் கருத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால்
ரன்வீர் சிங்: இணையத்தில் வைரலான நிர்வாண போட்டோஷூட் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com