பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் சாராவின் உருக்கமான பதிவு - சமூக ஊடக விமர்சனங்களுக்கு பதில்

சமூக ஊடகங்களில் தொடர்ந்து வரும் வெறுப்பு விமர்சங்களுக்கு சாரா அளித்த உருக்கமான பதில்
Archana and Zaara

Archana and Zaara

Twitter

Published on

2000 மாவது ஆண்டில் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாய் அறிமுகமானவர் அர்ச்சனா.பின்பு திருமணத்திற்கு பிறகு சில காலம் ஊடகத்தில் தலைகாட்டாமல் இருந்த அர்ச்சனா மீண்டும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அதில் குறிப்பாக இவர் ரஜினி,கமலை பேட்டி எடுத்த நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமடைந்தது.

இதன் பின் இவர் சென்ற ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதில் பல எதிர்மறை விமர்சங்கள் வந்தன.அது அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னும் தொறந்து கொண்டே இருந்தது.

பின்பு அவரது யூடியூப் சேனலில் 'பாத்ரூம் டூர்' என்ற வீடியோ ஒன்று வெளியானது. இதுவும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. இதற்கான விளக்கங்களை அப்போதே அர்ச்சனா கொடுத்து விட்ட நிலையில் தற்போது அவர் மீதும் அவரது மகள் சாரா மீதும் மீண்டும் எதிர்மறை கருத்துகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

பின் இவர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் தன் மகளோடு இனைந்து நடித்தார்.

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற அம்மா- பிள்ளை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். இதற்கான முன்னோட்டக் காணொளி தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியானது.

இதற்குதான் தற்போது அர்ச்சனாவையும் அவரது மகள் மீதும் பிக்பாஸ் மற்றும் யூடியூப் வீடியோ தொடர்பான கருத்துகளை தொடர்பு படுத்தி இதில் பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ச்சனாவும் அவரது மகளும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர்.

<div class="paragraphs"><p>Zaara's Tweet</p></div>

Zaara's Tweet

Instagram

அந்த பதிவில் என்ன இருந்தது ?

''நானும் என் அம்மாவும் இணைந்து சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தோம். நானும் அம்மாவும் இணைந்து அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதற்காக என்ன காரணம் என்றே தெரியாமல் அத்தனை வெறுப்புகளை சமூக வலைதளங்கள் மூலமாக சம்பாரித்தோம். அதிலும் குறிப்பாக நிறைய பெண்களிடம் இருந்தே அநாகரிகமான வார்த்தைகளில் எதிர்மறை பின்னூட்டங்கள் வந்திருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவிடம் இருந்தும் கூட அப்படியான பின்னூட்டம் வந்திருந்தது.

''நீங்கள் எங்களுக்கு அன்பு செலுத்த வேண்டாம்.ஆனால் வெறுப்பை உமிழாதீர்கள் . எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அதை உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள். அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதம் எங்களை பாதிப்படைய செய்கிறது. எங்களுக்கு உங்கள் வெறுப்பை கொண்டாட விருப்பமில்லை. எங்களை புரிந்து கொண்டு அன்பு செலுத்துபவர்களுக்கும் ஆதரவு கொடுப்பவர்களுக்கும் நன்றி. அன்புடன் சாரா" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com