"ஜென்மத்துக்கும் சிவகார்த்திகேயனோட படம் பண்ணமாட்டேன்" இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி - ஏன்?

"இனி இந்த ஜென்மத்துல அவரோட சேர்ந்து நான் படம் பண்ணமுடியாது. தனிப்பட்ட காரணங்கள் தான். அவரு எனக்கு செய்த மிகப் பெரிய துரோகம் தான் காரணம். வெளியில் சொல்ல முடியாது, ஆனால் இனி அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்" என்றார் இமான்.
"ஜென்மத்துக்கும் சிவகார்த்திகேயனோட படம் பண்ணமாட்டேன்" இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி - ஏன்?
"ஜென்மத்துக்கும் சிவகார்த்திகேயனோட படம் பண்ணமாட்டேன்" இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி - ஏன்?ட்விட்டர்

தனிபட்ட காரணங்களுக்காக இனி நடிகர் சிவ கார்த்திகேயன் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் டி இமான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும், இசையமைப்பாளர் டி இமான்.

இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பின்னணி பாடகராகும் வாய்ப்பை அளித்தவர் டி இமான் தான்.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இமான்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்று ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.

அதில் பேசியுள்ள இமான், சிவகார்த்திகேயனுடன் இனி பணியாற்ற மாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

"இனி இந்த ஜென்மத்துல அவரோட சேர்ந்து நான் படம் பண்ணமுடியாது. தனிப்பட்ட காரணங்கள் தான். அவரு எனக்கு செய்த மிகப் பெரிய துரோகம் தான் காரணம். வெளியில் சொல்ல முடியாது, ஆனால் இனி அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்" என்றார் இமான்.

"ஜென்மத்துக்கும் சிவகார்த்திகேயனோட படம் பண்ணமாட்டேன்" இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி - ஏன்?
Chandrayaan 3 மிஷனை கேலி செய்து பிரகாஷ் ராஜ் பகிர்ந்த ட்வீட் - நடிகர் மீது வழக்கு பதிவு

மேலும் பேசியவர், இது மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு தான் எனவும், அவர் தனக்கு செய்த துரோகத்தை உணர்ந்து அதிலிருந்து விடுபடவே இத்தனை காலம் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார் இமான்.

"அவர் செய்த துரோகத்தை உணர்ந்த போது, காலம் கடந்துவிட்டது. அவரிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதிலை நான் வெளியில் சொல்ல முடியாது. குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து சில விஷயங்களை நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். ஆனால் இனி அவருடைய படத்திற்கு இசையமைக்கப்போவதில்லை" என்று பேசியுள்ளார் இமான்.

நடிகரின் தரப்பில் இருந்து இது குறித்த எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"ஜென்மத்துக்கும் சிவகார்த்திகேயனோட படம் பண்ணமாட்டேன்" இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி - ஏன்?
”Ajith என்னை ஏமாற்றிவிட்டார்” நடிகர் மீது தயாரிப்பாளர் மோசடி குற்றச்சாட்டு! என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com