“வன்முறையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” - கிரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்

பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை" - will smith
Smith Couple
Smith CoupleOscars
Published on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் வில்ஸ்மித் நகைசுவையாளர் கிரிஸ் ராக்கை முகத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற வில்ஸ்மித் மேடையில் தனது தவற்றுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக் அதற்காக எந்தவித எதிர்வினையும் ஆற்றாமலிருந்தார்.

Smith Couple
Oscars 2022 : நகைச்சுவை நடிகரை தாக்கிய வில் ஸ்மித், என்ன நடந்தது ஆஸ்கர் மேடையில்?
வில் ஸ்மித் அறிக்கை
வில் ஸ்மித் அறிக்கைTwitter

தற்போது பொது வெளியில் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் கிரிஸ் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வில் ஸ்மித். அந்த அறிக்கையில், "எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. கடந்த இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. என்னை பற்றிய ஜோக்குகள் என் பணியின் ஒரு பகுதிதான், ஆனால் ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்னை பற்றிக் கிண்டலாகக் குறிப்பிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. நான் உணர்ச்சி வசப்பட்டு அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளேன்.

பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை." எனக் கூறியுள்ளார்.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா அதிகப்படியாக முடி உதிரும் அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது தலை முடிக் குறித்து ஜேக் செய்ததால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் அவரை அடித்தார். வில் ஸ்மித்தின் செயல் பெண்களை உருவகேலி செய்யும் அனைவருக்கு ஒரு பாடம் எனவும் வன்முறை எதற்கும் தீர்வாகாது எனவும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Smith Couple
Oscar 2022 : CODA, DUNE, Encanto - ஆஸ்கரில் கவனம் ஈர்த்த படங்கள், விருதுப் பட்டியல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com