இப்போதெல்லாம் சீரியல், ரியாலிட்டி ஷோ வாய்ப்புகளுக்குப் பல ஆடிஷன்களில் பங்கு பெற வேண்டும் என்று அவசியமில்லை. இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்தால் போதுமானது. விஜய் டிவியின் டாப் சீரியல்களை இயக்கும் இயக்குநர் பிரவீன் பென்னட், தன் சீரியல்களுக்கு பெரும்பாலும் இன்ஸ்டாவில் தேடி தான் நாயகிகளைத் தேர்வு செய்வாராம். பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய கண்ணம்மா வினுஷாவும் இன்ஸ்டாவில் கிடைத்தவர் தானாம். இன்ஸ்டாவுக்கு எவ்வளவு மவுசு பாருங்கள். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.
இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று சினிமா வாய்ப்புகள் பெற்றவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஷிவானி நாராயணன் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் கிளாமரான போட்டோ ஷூட்டுகள் மற்றும் ரீல்ஸ் மூலம் தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார்கள். யாஷிகா ஆனந்த் தற்போது படங்களில் பிஸியாகி விட்டார். பெரிய விபத்திலிருந்து மீண்ட யாஷிகா, பழையபடி கிளாமர் போட்டோஷூட்ஸ் மற்றும் ரீல்ஸ் பதிவிட்டு வருகிறார். ரேஷ் டிரைவிங் செய்ததால் ஏற்பட்ட அந்த பெரிய விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்ததால், யாஷிகா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரின் சமூக வலைதள பக்கங்களில் பலர் தொடர்ச்சியாக நெகடிவ் கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு யாஷிகா தன் இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சிலர் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், உடை நாகரிகம் பற்றியும் கேள்விகள் எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் யாஷிகா மிகவும் கூலாக பதிலளித்தார். இதுபோன்ற கேள்வி பதில் செக்ஷனில் இன்ஸ்டாவில் பிரபலங்கள் தங்களைப் பாராட்டிக் கேட்கும் கேள்விகளை மட்டும் தான் பதிவிடுவார்கள். ஆனால் யாஷ் தன்னை அவமதிக்கும் படியாக இருந்த கேள்விகளையும் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில..
உங்க எக்ஸ் பாய் பிரண்டு பத்தி சொல்லுங்க?
நிறைய பேர் இருக்காங்க நீங்க யார் பத்தி கேட்குகிறீங்க.
உங்க எக்ஸ் நிரூப் பத்தி சொல்லுங்க?
நிரூப் கூட நாலு வருஷம் டேட்டிங் பண்ணேன். மறக்க முடியாத நாட்கள் அவை. அவர் நிறைய அன்பானவர், அக்கறையானவர்.
உங்க பெஸ்ட் பிரெண்ட் எப்படி இறந்தாங்க?
நான் வேகமா கார் ஓட்டுனதால இறந்தாங்க.
என் கூட ஒரு இரவு இருக்க முடியுமா?
வேற வேலை இல்ல எனக்கு!
உங்கள முதல் முறையா ஆடையில்லாம பார்த்த லக்கி ஆண் யாரு?
டாக்டர்