”செல்லம் ஐ லவ் யூ...” ட்ரோல் வீடியாவை ஷேர் பண்ண பிரகாஷ்ராஜ்- திரிஷாவின் க்யூட் ரியாக்ஷன்

அப்படத்தில் பிரகாஷ் ராஜ் பிரிந்த மனைவி நினைத்து வருத்தப்படுவதைப் போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியை அப்படியே திரிஷாவை பொருத்தி ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பகிர்ந்தனர்.
Prakashraj-Trisha
Prakashraj-TrishaTwitter
Published on

யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அனிருத் இசையமைத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்Twitter

படத்தில் இடம்பெற்ற தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அப்படத்தில் பிரகாஷ் ராஜ் பிரிந்த மனைவி மற்றும் மகளை நினைத்து வருத்தப்படுவதைப் போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியை அப்படியே திரிஷாவை பொருத்தி ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பகிர்ந்தனர்.

அந்த வீடியோவில் இப்போது இருக்கிற பிரகாஷ் ராஜ், கில்லி படத்தில் இடம்பெற்ற திரிஷாவை நினைத்து வருந்துவது போன்று ட்ரோல் செய்திருந்தனர். அந்த வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்ததுடன் நடிகர் பிரகாஷ்ராஜையும் கவர்ந்துள்ளது.

Prakashraj-Trisha
Dhanush : திரைவாழ்க்கையில் 20 ஆண்டுகளை கடந்த தனுஷ்

இந்த வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ் கேப்ஷனாக, "அன்பிற்கு நன்றி … CHELLAM I love uuuuu" என்று திரிஷாவை டேக் செய்திருந்திருந்தார்.

இதனைப் பார்த்த திரிஷா, அதனை ரீ-ட்வீட் செய்து சிரிக்கும் எமோஜியை போட்டிருந்தார்.

இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் படுவைரலாக பகிரப்பட்டுப் பார்க்கப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com