விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி - என்ன சொன்னார் தெரியுமா?

ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு விடுதலை படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி - என்ன பேசினார் தெரியுமா?
விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி - என்ன பேசினார் தெரியுமா?Twitter
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாவனி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி வெளியானது.

அசுரன், விசாரணை போன்று அழுத்தமான திரைகதையை இப்படம் கொண்டிருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்ப்பின்படி இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு விடுதலை படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி - என்ன பேசினார் தெரியுமா?
உலகின் சிறந்த 250 படங்கள் இவை தான் - IMDB கூறும் சினிமா - Part 1

அந்த வகையில் தற்போது, ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, “விடுதலை...இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்; இது ஒரு திரைக்காவியம்.

சூரியின் நடிப்பு - பிரமிப்பு;

இளையராஜா - இசையில் என்றும் ராஜா;

வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை;

தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

2வது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்!" என ‘விடுதலை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்திருக்கிறார்

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி - என்ன பேசினார் தெரியுமா?
உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம் நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com