Che Life History : சேகுவேரா - வாழ்வை மாற்றிய அந்த ஒரு சந்திப்பு |பகுதி 1

“புரட்சியால் மட்டுமே இந்த மண்ணில் மாற்றங்களை உருவாக்க முடியும். ஆனால் புரட்சி தானாக உருவாவதில்லை நாம்தான் அதை உருவாக்க வேண்டும்” என்று தன் வாழ்வைப் புரட்சியின் கைகளில் ஒப்படைத்த ஓர் ஒப்பற்ற போராளியின் கதை இது!
cheguvera

cheguvera

Twitter

Published on

“என்னைச் சுடுவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்… கோழையே சுடு… மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டு சாவதே மேல்”

என்று தன் வாழ்வின் கடைசி நொடி வரை மரணத்தைக் கண்டு துளியும் அஞ்சாத ஒரு மாவீரன் வாழ்ந்த மண்ணில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . “எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் ஏன் எனில் என்னிடம் பாதங்கள் மட்டுமே இருக்கின்றன. வேர்கள் இல்லை” என்று தான் வாழும் காலம் முழுவதும் போராட்ட காற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருந்த ஒரு போராளி சுவாசித்த காற்றைத்தான் நாமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவன் வாழ்ந்த வாழ்வின் ஒரு துளியையாவது நாம் உணர்ந்திருப்போமா என்பது நிச்சயம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும். அப்படி ஒரு மேன்மையான வாழ்வை வாழ்ந்து சென்ற ஒரு புரட்சியாளரின் போராட்ட வாழ்வின் சில பக்கங்களைத்தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

சேகுவேரா

சேகுவேரா

Twitter

எர்னஸ்டோ குவேரா டெல செர்னா - டேட்டி - சேகுவேரா

இந்த மண்ணில் உதித்த மாபெரும் புரட்சியாளன். “புரட்சியால் மட்டுமே இந்த மண்ணில் மாற்றங்களை உருவாக்க முடியும். ஆனால் புரட்சி தானாக உருவாவதில்லை நாம்தான் அதை உருவாக்க வேண்டும்” என்று தன் வாழ்வைப் புரட்சியின் கைகளில் ஒப்படைத்த ஓர் ஒப்பற்ற போராளி.

கிபி 1928 ஆம் வருடம் ஜூன் மாதம் பதினான்காம் நாள் அர்ஜெண்டினா மாகாணத்தில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் எர்னஸ்டோ குவேரா லின்ச், சிசிலியா டெல செர்னா என்ற தம்பதியருக்கு முதல் மகனாகப் பிறந்தார் சேகுவேரா. வீட்டின் முதல் செல்லப்பிள்ளை என்பதால் அவரின் பெற்றோர்கள் தங்கள் இருவரின் பெயரையும் இணைத்து எர்னஸ்டோ குவேரா டெல செர்னா என்ற பெயரை வைத்து மகிழ்ந்தனர் ... ஆனாலும் வீட்டில் டேட்டி என்ற செல்லப்பெயர் கொண்டே அழைக்கப்பட்டார் சேகுவேரா.

cheguvera

மகாத்மா காந்தி முழுமையான வாழ்க்கை வரலாறு - எழுத்தாளர் அ முத்துக்கிருஷ்ணன்

சொந்தமாகத் தேயிலை மற்றும் மூலிகை பண்ணைகள் போன்றவை இருந்ததால் சேகுவேராவின் குடும்பம் இயல்பாகவே வசதியான குடும்பமாக இருந்து வந்தது. சேகுவேராவின் தாயார் நீச்சல் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் சேகுவேராவின் இரண்டு வயதில் அவருக்கு நீச்சல் பயிற்சி தந்தபோது அதிக குளிரின் காரணமாக ஆஸ்த்துமா அவருக்கு நோய் ஏற்பட்டது. இரண்டு வயதில் ஏற்பட்ட ஆஸ்துமா நோயானது சேகுவேராவின் வாழ்வின் கடைசி வரைக்கும் இருந்து வந்தது. ஆனாலும் சேகுவேராவுக்கு விளையாட்டிலிருந்த ஈடுபாடு குறையவில்லை.

motor cycle diaries - திரைப்படம்

motor cycle diaries - திரைப்படம்

Twitter

மோட்டார் சைக்கிள் டைரிஸ்

சேகுவேராவின் குடும்பம் இடதுசாரி சிந்தனையுள்ள குடும்பம் என்பதால் இளம் வயதிலேயே சேகுவேரா ஓரளவு அரசியல் அறிவோடு வளர்ந்து வந்தார். மேலும் கவிதைகளின் மீதும் சேகுவேராவிற்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பாப்லோ நெரூடா வில்லியம் கீட்ஸ் போன்றோரின் கவிதைகளை மனப்பாடம் செய்யும் அளவுக்கு விரும்பி வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார் . இதனால் வீட்டில் மூவாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார் . கார்ல் மார்க்ஸ், போல்க்னர் வேர்னே போன்றோரின் புத்தகங்களை அதிகம் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்த சேகுவேரா. அவர்கள் தவிர ஜவர்ஹலால் நேரு, ஏங்கல்ஸ் போன்றோரின் கருத்துக்களின் மீதும் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் . தான் வாசிக்கும் புத்தகங்களிலிருந்து சிறந்த மேற்கோள்களைக் குறித்து வைக்கும் பழக்கம் கொண்ட சேகுவேரா. புத்தர் அரிஸ்ட்டாட்டில் ஆகியோரின் பல கருத்துக்களைத் தனது வாழ்வின் வழித்துணையாகக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

cheguvera

கியூபா Vs அமெரிக்கா : உலகின் பெரியண்ணனை வீழ்த்திய தீவு தேசத்தின் வரலாறு

1948 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் உள்ள பியூனஸ் ஏர்ஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார் சேகுவேரா. 1951 ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் அப்போது தொழுநோய் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அதன் காரணமாக தன் மருத்துவ படிப்பில் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு தன் நண்பன் ஆல்பெர்ட்டோ கிரோனாவுடன் ஒரு மோட்டார் பயணத்தை மேற்கொண்டார் சேகுவேரா. அந்த பயணம் தான் சேகுவேரா-ன் அரசியல் பயணத்தின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

பிடல் காஸ்ட்ரோ  உடன் சே

பிடல் காஸ்ட்ரோ  உடன் சே

Twitter

லத்தீன் அமேரிக்கா முழுவதும் காணப்பட்ட வறுமையும் ஏற்ற தாழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது சேகுவேராவிற்கு வெறுப்பை உண்டாக்கியது. தொழுநோய் பற்றிய ஆய்வுக்காகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்வதும் தான் சேகுவேரா-ன் பயணத்தின் நோக்கமாக இருந்தது என்றாலும் அந்த பயணத்தில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் அவரின் வாழ்வையே புரட்டிப்போட்டது. 1953 ஆம் ஆண்டு தன் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த சேகுவேரா மீண்டும் ஒரு பயணத்தைத் தொடங்கினார். இந்த முறை பொலிவியா ,பெரு, பனாமா, ஈக்குவேடார், கொஸ் தாரிக்கா, நிகராகுவா, ஹொண்டூராஸ் எல் சல்வோடார் ஆகிய பல நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்கு சென்றார் . அங்கே மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படக் குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பன்ஸ் குஸ்மான் நில சீர்திருத்த அடிப்படையில் பெரும் தோட்ட முறையினை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சேகுவேராவிற்கு தான் கற்க விரும்பிய அரசியல் குவாத்தமாலாவில் கிடைக்கும் எனத் தோன்றியதால் அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

சேகுவேரா

சேகுவேரா

Tiwtter

முதல் காதல் - முதல் அரசியல்

குவாதமாலாவில் தான் சேகுவேரா தனது முதல் வாழ்க்கை துணைவரான ஹில்டா கடேயா அக்கொஸ்தாவை சந்தித்தார் . அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்ற இயக்கத்தில் உறுப்பினராக இருந்த ஹில்டாவின் மூலம் சேகுவேராவிற்கு நிறைய அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன. மேலும் அப்போது புலம் பெயர்ந்த சில கியூபா மக்களோடும் பிடல் காஸ்ட்ரோவுக்கு நெருக்கமான சிலரோடும் சேகுவேராவிற்கு அறிமுகம் ஏற்படுகிறது . அவர்களோடு நட்பு கொண்ட காலத்தில்தான் சேகுவேராவிற்கு சே என்னும் அடையாளம் ஏற்பட்டது. சே என்னும் சொல்லுக்கு நண்பர் அல்லது தோழர் என்பதே பொருளாகும். இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் சி ஐ ஏ அமைப்பானது குவாதமாலாவில் அமைந்திருந்த மக்களாட்சியைச் சீர் குலைத்தது. இதனால்1954 ஆம் ஆண்டு சேகுவேரா அங்கிருந்து மெக்சிகோ சென்றடைந்தார்.

மெக்சிகோ சென்றடைந்த சேகுவேராவிற்கு அங்கே நாடு கடத்தப் பட்ட கியூபா மக்களின் நேரடி அறிமுகம் கிடைக்கிறது. மேலும் சேகுவேராவின் புரட்சிகர அரசியலில் ஈர்க்கப்பட்ட நிக்கோ லோபஸ் என்பவரின் மூலம் கியூபாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடும் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார் சேகுவேரா. இந்த சந்திப்புதான் கியூபாவின் அரசியல் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சந்திப்பாக மாறியது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com