அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதய்
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி!
- நா. முத்துக்குமார்
இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி காதல்தான். உண்மை காதல் கண்களால் வருவதில்லை மனதால் வருகின்றது காதல் குறித்து ஷேக்ஸ்பியர் சொன்ன கருத்து இது. கண்களாலோ அல்லது மனதாலோ, ஏதோ ஒரு தருணத்தில் வாழ்க்கையில் ஒரு முறையேனும் நீங்கள் காதலை கடப்பீர்கள் அல்லது காதல் உங்களை கடக்கும்.
சரி.... நினைவுகளை மீட்டுவோமா... நம் இளம் வயதில், காதலை சொல்ல தயங்கிய தருணத்தில் நாம் விளையாடிய Flames-ஐ மீண்டும் விளையாடுவோமா, Lover meterல், Love calculatorல் நமக்கு நம் காதலிக்கோ, தோழிக்கோ எப்படியான இணக்கம் என காண்போமா
Flames விளையாட இங்கே க்ளிக் செய்யவும் | Love Calculator விளையாட இங்கே க்ளிக் செய்யவும் | Love Meter பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்