டெஸ்லா நிறுவனத்துக்கு டஃப் கொடுக்கும் இந்தியக் கணக்கு வாத்தியாரின் சோலார் கார்

காஷ்மீரைச் சேர்ந்த பிலால் அஹமத் ஒரு கணித ஆசிரியர். இவர் ஒரு மலிவு விலை சோலார் காரை வடிவமைத்து இருக்கிறார். அந்த காரில் சொகுசாகப் பயணிக்க எல்லாவித வசதிகளும் இருக்கின்றன.
பிலால் அஹமத்
பிலால் அஹமத் Twitter
Published on

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், பாரத் ஸ்டேஜ் 6 மாற்றத்தால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை ஏற்றம் என வாகனங்களை வாங்கி நிம்மதியாக ஓட்ட முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்து வருகிறது.

இந்த பிரச்சனைக்குத் தொடர்ந்து பல தரப்பினரும் பல தீர்வுகளை முன்வைத்து வருகிறார்கள். சிலர் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். சிலரோ பெட்ரோலோடு எத்தனாலைக் கலக்கத் தொடங்கலாம் என்கிறார்கள்.

காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர், சோலார் கார் ஒன்றை தன் சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார்.

இந்தியாவின் வட கோடியில் இருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த பிலால் அஹமத் ஒரு கணித ஆசிரியர். இவர் ஒரு மலிவு விலை சோலார் காரை வடிவமைத்து இருக்கிறார். அந்த காரில் சொகுசாகப் பயணிக்க எல்லாவித வசதிகளும் இருப்பதாகப் பல வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த காரைப் பார்க்க, 'பேக் டூ தி ஃப்யூச்சர்' என்கிற பழைய ஹாலிவுட் படத்தில் வரும் டிலொரியன் (Delorean) ரக கார்களைப் போன்று இருக்கிறது. காரின் இருபக்க கதவுகளும் விமான றெக்கை போல மேல் நோக்கித் திறக்கின்றன. இப்படி ஒரு காரைக் கண்டுபிடிக்க பிலால் அஹ்மத் கடந்த 11 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார்.

தொடக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தகுந்தாற் போல் ஒரு காரை உருவாக்க விரும்பினார் பிலால் அஹமத். அதற்கு நிதி ஆதாரங்கள் தடையாக இருந்ததால் சோலார் சக்தியைக் கொண்டு இயங்கும் காரைத் தயாரிக்கத் தொடங்கினார். இன்று தன் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

பிலால் அஹமத்
நம் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும் - ஏன் தெரியுமா?

இந்த காரைத் தயாரிக்க பிலால் அஹமத் சுமார் 16 லட்சம் ரூபாயைச் செலவழித்திருக்கிறார். காஷ்மீர் பிரதேசத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான ஒமர் அப்துல்லா உட்படப் பலரும் பிலால் அஹமதின் அற்புத கண்டுபிடிப்பைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.

இன்னும் சில ட்விட்டர்வாசிகள், எலான் மஸ்கை டேக் செய்து, இந்தியாவின் டெஸ்லா காரைப் பார்த்தீர்களா எனப் பதிவிட்டுள்ளனர். மேலும், பிலால் அஹமதை டெஸ்லாவில் பணிக்கு அமர்த்த எலான் மஸ்க் அழைப்புவிடுக்க வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

பிலால் அஹமத்
உலகின் மிக நீளமான கார்... கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கர் | Video

இந்த கார் முழுமையாக சோலார் சக்தி மூலம் மட்டும் தான் இயங்குகிறதா? வழக்கமான கார்களை விட பிலால் அஹமதின் சோலார் காரின் பராமரிப்புச் செலவுகள் எவ்வளவு ஆகின்றன? இந்த சோலார் காரின் அதிகபட்ச வேகம் என்ன? போன்ற விவரங்கள் பெரிதாகச் செய்திகளில் இல்லை.

விரைவில் இதை மஹிந்திரா, டாடா, டெஸ்லா... என ஏதாவது ஒரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தினர் பார்வையிட்டால், இது தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தன் சொந்த முயற்சியில் ஒரு சோலார் காரை உருவாக்கிய கணித ஆசிரியர் பிலால் அஹமதுக்கு நம் வாழ்த்துகள்.

பிலால் அஹமத்
தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com