Kiss Day : முத்தத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

அன்பு, காமம் என்ற இரண்டு பாதைகளில் முத்தம் பயணிக்கிறது. காதலிலும் சரி பிற உறவுகளிலும் சரி பிணைப்பை அதிகப்படுத்தும் வசியமருந்தாக முத்தத்தைச் சொல்லலாம். வாழ்வெல்லாம் அன்பை சுமக்கும் கருவியான முத்தத்தைக் கொண்டாடும் தினம் இன்று.

Kiss
KissTwitter
Published on

நம் தினசரி அலைச்சல், உளைச்சல்களிலிருந்து விடுதலைக் கொடுத்து அன்பின் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாயில் தான் முத்தம். முத்தம் கொடுக்கவும் பெறவும் இனம், பாலினம், வயது, உறவு என எந்த வரம்புகளும் இல்லை. தாயிடம் முதன்முதலாக பெற்றதிலிருந்து பேர பிள்ளையிடம் பெறுவது வரை வாழ்வெல்லாம் அன்பை சுமக்கும் கருவியான முத்தத்தைக் கொண்டாடும் தினம் இன்று.

அன்பு, காமம் என்ற இரண்டு பாதைகளில் முத்தம் பயணிக்கிறது. காதலிலும் சரி பிற உறவுகளிலும் சரி பிணைப்பை அதிகப்படுத்தும் வசியமருந்தாக முத்தத்தைச் சொல்லலாம். ஒரு முத்தம் பரிமாறப்படுவதனால் நமக்கு என்னென்ன கிடைக்கிறது தெரியுமா?

முத்தத்தினால் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 1 நிமிடம் வரை நீளும் முத்தத்தினால் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. எவ்வளிவு சிறிய முத்தமாயினும் குறைந்து 2 கலோரிகள் எரிக்கப்படும்.

உண்மையில் முத்தம் முகத்துக்கான உடற்பயிற்சியாக இருக்கிறது. ஒவ்வொரு முத்தத்திலும் உதடு மற்றும் அதைச் சுற்றிய 12 தசைகள் செயல்படுகின்றன. ஒரு ஆழமான முத்தத்தில் 34 முக தசைகள் இயக்கப்படுகின்றன. முகம் மற்றும் தாடையின் வடிவம் சீராக முத்தம் உதவும்.

அதிகம் முத்தமிடுபவர்கள் அதிக அழகாகக இருப்பார்கள்!


Kiss
உடலுறவுக்குப் பிறகான இந்த நிமிடங்கள் முக்கியமானவை - அதை உணர்ந்திருக்கிறீர்களா?

முத்தம் குறித்த ஆராய்சிகளுக்கு philematology எனப் பெயர். Philematology படி, முத்தமிடும் போது நம் இதயத் துடிப்பு 58% அதிகரிக்கிறது.

10 வினாடிகள் உதடில் முத்தம் கொடுக்கும் போது 9 மில்லி லிட்டர் உமிழ் நீர் பரிமாறப்படுகிறது. உமிழ்நீரிலிருக்கும் புரதம், கொழுப்பு, உப்பு மற்றும் நீரும் பரிமாறப்படுகிறது.

அதிக முத்தம் அதிக ஆரோக்கியம்

முத்தமிடும் போது 66 விழுக்காடு மக்கள் கண்களை மூடிக்கொள்கின்றனறாம்.


Kiss
முத்தத்தில் கின்னஸ் சாதனை : Italian Kiss என்றால் என்ன தெரியுமா?

கொழுப்பு மற்றும் உடல் பருமனைத் அதிகரிக்கும் கார்டிசால் ஹார்மோன் கோபத்தை அதிகரிக்கும். நாம் முத்தமிடும் போது இந்த கார்டிசால் ஹார்மோனின் சுரப்புக் குறைகிறது. நம் உணர்ச்சிகளை பெருக்கும் அட்ரீனலின் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன், மனதில் அமைதியை ஏற்படுத்தும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது.

அதிக முத்தம் அதிக மகிழ்ச்சி!


Kiss
குட்டியை முதன்முதலாக பார்க்கும் ஒட்டகச்சிவிங்கி - மனைவிக்கு முத்தம் கொடுக்கும் Viral Video
  • மன உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து விடுதலைத் தரும்.

  • இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

  • தலைவலி அல்லது மாதவிடாய் பிடிப்புகளை குறைக்கும்

  • பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும்

  • சுய மதிப்பீட்டை அதிகரிக்கும்

  • நம் துணையுடனான பிணைப்பை அதிகரிக்கவும் மதிப்பிடவும் உதவும்.

  • வலியிலிருந்து நிவாரணம் தரும்.

இப்படி முத்தத்திலிருந்து நமக்கு பல நல்ல விஷயங்கள் கிடைக்கிறது. இது எல்லாம் கிடைக்க ஒரு முத்தம் கிடைக்கணுமே என கேட்கிறீர்களா? அதைச் சம்பாதிப்பதில் தானே வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது!


Kiss
Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com