கவனிக்க மறந்த 13 உணவுகள் : தினசரி உணவாக எப்படி மாற்றுவது? | Nalam 360

நம் வீட்டருகிலோ கடைகளிலோ சில உணவுகளைப் பார்த்திருப்போம். அது வெறும் உணவுகள் மட்டுமல்ல. நோய்களைத் தீர்க்கும் மூலிகைகள்
மூலிகை உணவுகள்

மூலிகை உணவுகள்

Facebook

நம் வீட்டருகிலோ கடைகளிலோ சில உணவுகளைப் பார்த்திருப்போம். அது வெறும் உணவுகள் மட்டுமல்ல. நோய்களைத் தீர்க்கும் மூலிகைகள். ஆனால், அவை எதற்குப் பயன்படும்? எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாமல் இருந்திருப்போம். நம் அருகிலே அவை இருந்தும் வீணாக்கி இருப்போம். அப்படிப்பட்ட சில உணவுகளை எப்படி நாம் மூலிகை உணவாக மாற்றிப் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மூங்கில் அரிசி

மூங்கில் அரிசி

Twitter

மூலிகை உணவுகளைத் தினசரி நம் உணவில் சேர்க்கும் முறைகள்

மூங்கில் அரிசி

மூங்கில் அரிசியைத் தினமும் ஒரு வேளை சமைத்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோய் தணியும்.

10 கிராம் எடையளவுக்கு மூங்கில் அரிசியை இடித்து 2 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து அதை 2 பங்குகளாக்கி தொடர்ந்து 3 நாட்கள் காலை, மாலை உட்கொண்டால் மாதவிலக்கு கோளாறும் அது தொடர்பான வயிற்று வலியும் நீங்கும்.

மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும். ரத்தக் கொதிப்புச் சீராகும். கண் நோய்கள் தீரும்.

முருங்கைப் பிசின்

முருங்கைப் பிசின்

Facebook

முருங்கைப் பிசின்

10 கிராம் முருங்கைப் பிசினை தண்ணீரில் கழுவி 300 மிலி பாலில் போட்டுக் காய்ச்சி ஆறவிடவும். ஆறியதும் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு அருந்த ஆண்மை சக்தி பெருகும். இரவு உணவுக்குப் பின் சாப்பிட நீர்த்துப்போன விந்து கட்டும்.

5 கிராம் கசகசா, 10 கிராம் முருங்கைப் பிசின் ஆகிய இரெண்டையும் 400 மிலி பாலில் காய்ச்சி தொடர்ந்து அருந்த விந்து பலமடையும்.

எலுமிச்சம் பிஞ்சு

எலுமிச்சம் பிஞ்சு

Twitter

எலுமிச்சம் பிஞ்சு

விதை முற்றாத பிஞ்சை ஊறுகாய் போட்டு உணவோடு சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். பித்தம் தணியும். ரத்த மூலம் சரியாகும். கடையில் வாங்குவதைத் தவிர்க்கவும். வீட்டில் தயாரிக்கப்படுவதிலே மருத்துவக்குணம் கிடைக்கும்.

நாவல் பழம்

நாவல் பழம்

Twitter

நாவல் பழம்

அளவாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்களைக் குணமாகும். திக்குவாயைச் சரிசெய்யும். சர்க்கரை நோயைக் குணமாக்கும். விந்துவைக் கெட்டியாக்கும். இருமலைத் தணிக்கும். தொண்டைப்புண்களைச் சரியாக்கும்.

மாவடு

மாவடு

Twitter

மாவடு

தேவையான மாவடுவை எடுத்து, ஒவ்வொரு வடுவின் மேலும் ஊசியால் பல முறை குத்தி உப்பு கலந்த நீரில் ஊறப்போடு ஒரு துணியால் மூடி கட்டி வெய்யிலில் வைத்து உப்புத் தண்ணீர் சுண்டியதும் மாவடுவை காலை, பகல் உணவுகளில் உணவோடு சாப்பிடுகையில் செரிமானம் சீராகும்.

பப்பாளி காய்

பப்பாளி காய்

Facebook

பப்பாளி காய்

பப்பாளி காயைத் தனியாகப் பொரியல் செய்தோ அல்லது அசைவ உணவுகளில் சேர்த்து சமைத்தோ, சாம்பாரில் சேர்த்து சமைத்தோ சாப்பிட உடல்பருமனைக் குறைக்கும்.

நுணாக்காய்

நுணாக்காய்

Twitter

நுணாக்காய்

நுணாக்காயை முறைப்படி ஊறுகாய்ச் செய்து உண்டு வந்தால் வயிறுத் தொடர்பான பல நோய்கள் நீங்குவதுடன் உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி ஆகியவைச் சரியாகும். உடல் வலுவடையும்.

வாகைப் பிசின்

வாகைப்பிசினை பசும்பாலில் கழுவி உலர்த்தித் தினமும் அரைத்தேக்கரண்டி அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், சூடு கட்டிகள் குணமாகும். உடல் வலுவடையும்.

பலாப்பிஞ்சு

பலாப்பிஞ்சு

Facebook

பலாப்பிஞ்சு

பலாப்பிஞ்சை தோல் நீக்கி சமைத்து உண்டால் வாயு கோளாறு, மலச்சிக்கல், உணவுக்கு முன் ஏற்படும் வயிற்று வலி ஆகியவை சரியாகும். ஆண்மை சக்தி கிடைக்கும். பித்த நோய்கள் தணியும்.

சவ்வரிசி

சவ்வரிசி

Twitter

சவ்வரிசி

சவ்வரிசி மாவைப் பால் சேர்த்துக் கிண்டி களிபோல் செய்து சிறிது வெல்லம் சேர்த்து உட்கொண்டு வந்தால் ஆண்மை சக்தி மிகும். நீர்த்துப்போன விந்து திடப்படும்.

வில்வக்காய்

வில்வக்காய்

Facebook

வில்வக்காய்

ஓரளவுக்கு முற்றிய வில்வக்காயின் ஓடு மற்றும் விதைகளை நீக்கிவிட்டு 3 நாட்கள் வெய்யிலில் காய வைத்து ஈரமும் பாதிக் காய்ந்துபோகும். பின் சிறிது வெந்தயம், மிளகு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஊறுகாயாகத் தயாரிக்கவும். இதைச் சாப்பிட மலச்சிக்கல் தீரும். செரிமானம் சீராகும்.

பதநீர்

பதநீர்

Twitter

பதநீர்

பதநீர் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. வயிறு தொடர்பான நோய்கள், சிறுநீர்ப்பை கோளாறுகள் சரியாகும். பணங்கற்கண்டு உடல் சூட்டைத் தணிக்கும். நீர்ச்சுருக்கை குணப்படுத்தும்.

ஆலம் பழம்

ஆலம் பழம்

Facebook

ஆலம் பழம்

ஆலம் பழத்தை பாலில் அவித்துப் பழங்களை மட்டும் உட்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் வருகின்ற எரிச்சல் நீங்கும். பித்தமும் தணியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com