Head Ache : படுத்தி எடுக்கும் தலைவலி 13 நிரந்தர தீர்வுகள்

வலி நிவாரணி வலியை போக்காது. வலிப்பதை உணராமல் செய்யும் கூடுதலாகப் பக்க விளைவுகளை அதிகப்படுத்தும். தொடர்ந்து வலி நிவாரணிகள் எடுப்போருக்கு கிட்னி ஃபெயிலியர், கல்லீரல் பிரச்சனைகள் வெகு தொலைவில் இல்லை என அர்த்தம்.
தலைவலி

தலைவலி

Twitter

Published on

தலைவலிக்குக் காரணம் கண்டுபிடிப்பதே ஒரு பெரிய தலைவலிதான். விதவிதமான தலைவலிகள் இருக்கின்றன. தலைபாரத்தால் வலி, மூக்கில் நீர் வழிவதால் வலி, தலைக்குளித்தால் வலி, வாசனை ஒத்துக்கொள்ளாமல் வலி, வெயிலால் வலி, பசியால் வலி, ஏசி தலைவலி என இன்னும் என்னென்னமோ காரணங்கள் உள்ளன. அலோபதி மருத்துவமும் தலைவலிக்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி இந்த வகை, அந்த வகை என வகைப்படுத்துகின்றனர். இதை இயற்கை முறையில், மரபு வழியில் நாம் சரிசெய்ய முயற்சிப்போம்.

மூல காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், விளைவு தலைவலி வருகிறது. பொதுவாக ஒரு இடத்தில் வலி உள்ளது என்றால் அங்குக் கழிவின் தேக்கம் இருக்கும். என்ன கழிவாக இருக்கும்? வெப்பமாகவோ நீராகவோ காற்றாகவோ சளியாகவோ ரத்தமாகவோ வாயுவாகவோ கட்டியாகவோ சீழாகவோ இருக்கலாம். எது என்று சரியாகத் தெரியாது. ஆனால், கழிவின் தேக்கத்தை உடல் நீக்குகிற முயற்சியே, நமக்கு வலி எடுக்கும் உணர்வு. வலி வந்தால் வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவது அதைவிடக் கொடுமையான விஷயம் வேறு இல்லை. இது வலியை போக்காது. வலிப்பதை உணராமல் செய்யும் கூடுதலாகப் பக்க விளைவுகளை அதிகப்படுத்தும். தொடர்ந்து வலி நிவாரணிகள் எடுப்போருக்கு கிட்னி ஃபெயிலியர், கல்லீரல் பிரச்சனைகள் வெகு தொலைவில் இல்லை என அர்த்தம்.

தலைவலி

தலைவலி

Twitterர்

நிரந்தர வழி

அப்போ ரசாயன மருந்துகள் தலையீடு இல்லாமல் எப்படித் தலைவலியை சமாளிப்பது என்கிறீர்களா? வலியை பொறுப்பதுதான் முதல் வழி. வலி வந்தால் வீட்டில் இருந்தால் ஓய்வு எடுங்கள். எதையும் பார்க்காமல் படிக்காமல் கண்கள் மூடி ஓய்வெடுங்கள். இதுதான் மிகச் சிறந்த நிரந்தரத் தீர்வு. கொஞ்சம் கடினமாக இருந்தாலும் இதுவே தீர்வாகும். பொறுத்தால் பலன் நிச்சயம். கழிவு நீக்கப்படுகையில் வலி உணர்வு வருகிறது. நோய் சரியாகி கொண்டிருக்கிறது என அர்த்தம். இதுவே சிகிச்சைதான் இதுக்கு எதற்கு ஒரு தனி சிகிச்சை. வலியை கொஞ்சம் கூடப் பொறுக்காத சிலருக்கு அடுத்த வழிகளும் பார்க்கலாம்.

கால் நனைத்தல்

ஒரு பாத்திரத்தில் இளஞ்சூடான நீர், மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீர் வைத்துக்கொண்டு தலைவலிக்கும் போது இரு பாதங்ளையும் இளஞ்சூடான நீரில் நனையும் படி சிலநிமிடங்கள் வரை வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் இரு பாதங்ளையும் நீரில் நனையும் படி சிலநிமிடங்கள் வரை வைக்கவும். இவ்விதம் தலைவலி தீரும் வரை மாற்றி மாற்றிப் பாதங்களை இந்தத் தண்ணீரிலும் அந்தத் தண்ணீரிலும் மாற்றி மாற்றி வையுங்கள். தலைவலி தீரும்.

தலைவலி

தலைவலி

Twitter

உணவு தவறு

பால் சேர்த்த காபி, டீ, பால் பொருட்களான பால், தயிர், மில்க் ஷேக், சீஸ், பட்டர், பனீர் போன்ற பால் பொருட்கள் சாப்பிடுவோருக்கு அதிகமாகத் தலைவலி வரும். ஏனெனில் இது அத்தனையும் கழிவு. கழிவை தின்றால் கழிவு நீக்கம் உடலில் நடக்கும். ஆதலால், தலைவலி வரும்.

மலச்சிக்கலும் ஒன்று

முக்கியக் காரணங்களில் மலச்சிக்கல் இருந்தால் ‘தலைவலி ஃப்ரீ நோய்’ எனலாம். ஆம். மலச்சிக்கலுக்கும் தலைவலிக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. எனிமா குவளை பயன்படுத்தி மலச்சிக்கலைத் தீர்க்கலாம். மலச்சிக்கல் தீர்க்கும் சூரணங்களைச் சாப்பிடலாம். உணவில் கீரைகள், நார்ச்சத்துள்ள காய்களைச் சாப்பிடலாம். அவசியம் கொய்யா, பப்பாளி, சப்போட்டா சாப்பிடுவது மலச்சிக்கலை நீக்கும். காலை உணவு இயற்கை உணவாக இருந்தால் மலச்சிக்கல் வராது. முக்கியமாகப் பசித்தால் மட்டும் சாப்பிடும் பழக்கத்துக்கு வந்தால் தலைவலி எட்டிகூடப் பார்க்காது.

தலைவலி

தலைவலி

Twitter

ஈரம் தரும் தீர்வு

நெற்றியில் ஈரத்துணிப்பட்டி போட்டுக் கொள்ளலாம். வெள்ளை காட்டன் துணியை நனைத்து பிழிந்து தலையில் பட்டி போடவும். ஈரக்களிமண் பட்டி 20 நிமிடங்கள் போட்டாலும் தலைவலி சரியாகும்.

பலா வேர்

பலா மரத்தின் சிறுவேரை பிழிந்து, சாற்றை ஓரிரு துளிகள் மூக்கில் விட்டால் நீண்ட நாள் தலைவலிகூடச் சரியாகும்.

பானமாக…

நொச்சி இலைச்சாறு, வில்வ இலைச்சாறு, எலுமிச்சம் சாறு ஆகியவை அரை டம்ளர் அளவுக்குக் குடிக்கத் தலைவலி சரியாகும்.

ஓமம், மிளகு, பூண்டுத் தோல் மூன்றையும் தூள் செய்து நெருப்பில் இட்டு அதன் புகையை முகர்ந்து வர, மூக்கில் நீர் வடிதல் குணமாகி தலைவலி தீரும்.

தலைவலி

தண்ணீரை எப்படி உடலுக்கு மருந்தாக்குவது? வெறும் தண்ணீர் குடிக்க நோய் தீருமா ?

நீர் வழியும் வலி

மூக்கில் நீர் வழிந்து கொண்டும் தலைவலி இருந்தால், நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கச் சரியாகும்.

நீரேற்ற தலைவலி

தும்பைப்பூவின் சாறை இருதுளிகள் மூக்கில் விட்டால் தும்மல் உண்டாகி தலையில் ஏறிப்போன நீர் தும்மல் மூலம் வெளியேறி தலைவலி சரியாகும்.

புகை வைத்தியம்

ஓமம், மிளகு, பூண்டுத் தோல் மூன்றையும் தூள் செய்து நெருப்பில் இட்டு அதன் புகையை முகர்ந்து வர, மூக்கில் நீர் வடிதல் குணமாகி தலைவலி தீரும்.

தலைவலி

தலைவலி

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை இரண்டாக அறிந்து, இருபக்க பொட்டுகளில் மெல்ல தேய்க்க தைலம் போல் வேலை செய்து தலைவலி குறையத் தொடங்கும்.

பற்று வைத்தியம்

நெல்லிக்காயை அரைத்து பற்றுப் போடலாம். தேற்றான் கொட்டையை அரைத்தும்கூடப் பற்றுப் போடலாம்.

இரும்பு பாத்திரம்

ஓர் இரும்பு கரண்டியை அடுப்பில் காய வைத்து, நன்கு காய்ந்த பின் எலுமிச்சை பழச்சாறை அதில் விட்டால், பொங்கி எழுந்து தணியும். அதை வேறொரு ஒரு இரும்பு கரண்டியால் கிளறிவிட்டு இளஞ்சூடாகத் தலைப்பொட்டுகளில் சாறை விட்டு இருபக்கமும் தேய்க்கலாம். தலைவலி குணமாகும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com