மதவிடாய் வலிதாங்காமல் கருத்தடை மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம் - என்ன நடந்தது?

மாதவிடாய் வலி தீவிரமாக இருந்த லைலா கான் 16 வயது என்ற பெண்ணுக்கு அவரது நண்பர்கள் கருத்தடை மாத்திரையை பரிந்துரைத்துள்ளனர்.
மதவிடாய் வலிதாங்காமல் கருத்தடை மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம் - என்ன நடந்தது?
மதவிடாய் வலிதாங்காமல் கருத்தடை மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம் - என்ன நடந்தது?Twitter
Published on

இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாதவிடாய் வலியை தாங்க முடியாமல் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததால் மூளையில் இரத்தம் உறைந்து உயிரிழந்துள்ளார்.

மாதவிடாய் வலி தீவிரமாக இருந்த லைலா கான் என்ற பெண்ணுக்கு அவரது நண்பர்கள் கருத்தடை மாத்திரையை பரிந்துரைத்துள்ளனர். அதன்படி நவம்பர் 25ம் தேதி முதல் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளார் அந்த பெண்.

டிசம்பர் 5ம் தேதி அந்த லைலா கானுக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த அவரது பெற்றோர் 111 NHS helpline -னுக்கு அழைத்துள்ளனர். (லண்டனில் செயல்படும் இந்த ஹெல்ப் லைனில் நோய் அறிகுறிகளைக் கூறினால் அதற்கான விளக்கம் கொடுக்கப்படும்). ஹெல்ப் லைனில் தீவிரமாக பிரச்னை இல்லை என்றும் மறுநாள் காலையில் சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

மறுநாள் மருத்துவர்கள் வயிற்றுப் பூச்சி என்று நினைத்து நோய் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கியதாக லைலாவின் உறவினர் கூறியுள்ளார்.

மாத்திரைகள் போட்ட பின்பும் வாந்தி தொடர்ந்தால் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுநாள் லைலா வலியால் துடித்துள்ளார். ஆனால் அவர் பாத்ரூமில் மயங்கி விழுவதற்கு முன்னர் தனக்கு வலி எல்லாம் சரியாகிவிட்டதாக கூறியுள்ளார்.

மயங்கிய லைலாவை இரண்டு மருத்துவ மனைகளுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். இறுதியில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

மதவிடாய் வலிதாங்காமல் கருத்தடை மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம் - என்ன நடந்தது?
'பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தேவையில்லை' - ஸ்மிருதி இரானி சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com