ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் - எப்படி திசை திருப்பலாம்? 3 டிப்ஸ் இதோ!

ஸ்மார்ட்போன்களில் இருந்து விலகி, தொழில்நுட்பத்துடன் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொள்ள உதவுங்கள். குழந்தைகள் திரைக்கு அப்பால் உலகை ஆராய்வதற்கும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் பெற்றொர்கள் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.
5 interesting activities to help your child get over smartphone addiction
5 interesting activities to help your child get over smartphone addictionTwitter

ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. செல்போன் இல்லாத ஒரு நாளை கூட நினைத்து பார்க்க முடியவில்லை. ஆன்லைன் பேமெண்ட், வேலை தொடர்பான கம்யூனிக்கேஷன், பொழுதுபோக்கு என பல விஷயங்களுக்கு நம் ஸ்மார்ட் போனை நாடுகிறோம்.

குறிப்பாக குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி வருகின்றனர். குழந்தைகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களும் உடனே கையில் ஃபோனை கொடுத்துவிடுகின்றனர்.

இளையதலைமுறைகளிடையே கண் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது . குழந்தைகள் ஸ்மார்ட்போன் சார்ந்திருப்பதைக் குறைக்கும் செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடுவது முக்கியமாக இருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பெற்றோர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கற்றுகொடுப்பது அவசியம்

ஸ்மார்ட்போன்களில் இருந்து விலகி, தொழில்நுட்பத்துடன் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக்கொள்ள உதவுங்கள். குழந்தைகள் திரைக்கு அப்பால் உலகை ஆராய்வதற்கும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் பெற்றொர்கள் பொறுப்பெடுத்துக்க வேண்டும். எப்படி ஸ்மார்ட் போனிலிருந்து குழந்தைகளின் திசையை திருப்புவது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்

வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி முயற்சிகள்

வெளிப்புற விளையாட்டுகள் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் திரைகளில் இருந்து அவர்களை விலகி இருக்க செய்கிறது.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது தற்காப்புக் கலைகள் போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளையும், கால்பந்து, கூடைப்பந்து அல்லது டென்னிஸ் போன்ற குழு விளையாட்டுகளையும் முயற்சிக்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கவும். இந்த நடவடிக்கைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்க உதவுவதோடு, சமூக தொடர்பை ஏற்படுத்தும்.

5 interesting activities to help your child get over smartphone addiction
உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இந்த 50 செயலிகள் இருக்கா? - உடனே டெலிட் செய்யுங்கள்

இயற்கையை நாடுதல்

சாகசத்திற்கான வாய்ப்புகளை இயற்கை வழங்குகிறது. நடைபயணம், தோட்டக்கலை அல்லது பறவைகள் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். இந்த நடவடிக்கைகள் குழந்தைகள் இயற்கை உலகின் அழகை ரசிக்க உதவுவது மட்டுமல்லாமல், உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

இயற்கையுடன் ஒன்றிணைவதால், குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும்.

கலைகளில் ஆர்வம்

எழுதுதல், இசைக்கருவி வாசித்தல் அல்லது ஓவியம் வரைதல் போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளைத் தொடர உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். அறிவுத்திறனைத் தூண்டுவதுடன், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவது கவனம், சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

5 interesting activities to help your child get over smartphone addiction
கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் உதைக்கிறார்கள் தெரியுமா? 6 சுவாரஸ்ய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com