கல்லீரல், குடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கும் 4 பானங்கள்

ஒட்டுமொத்த வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொரு வாரமும் ஒரு பானம் என கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 பானங்களை ஒவ்வொரு வாரமாகக் குடித்து வரவேண்டும். ஒரு மாதத்திலே பெரிய பலன்களை காணலாம்.
Juice
JuiceTwitter
Published on

வயிறு மண்டலம்தான் மனிதனின் பெரும்பாலான நோய்களுக்கான காரணமே. வயிறு, உயிரின் ஆதாரமும்தான். வயிற்றுப் பகுதியை வைத்துதான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன. ஒட்டுமொத்த வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொரு வாரமும் ஒரு பானம் என கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 பானங்களை ஒவ்வொரு வாரமாகக் குடித்து வரவேண்டும். ஒரு மாதத்திலே பெரிய பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.

முதல் வாரம் - கல்லீரலைச் சுத்தப்படுத்தும் பானம்

கொத்தமல்லி - 2 கைப்பிடி

இந்துப்பு - ஒரு சிட்டிகை

சீரகம் - ½ ஸ்பூன்

தேவையான அளவு தண்ணீர்

மேற்சொன்ன பொருட்களை மிக்ஸியில் லேசாக நீர் விட்டு அரைத்து, ஒரு டம்ளர் அளவுக்கு, பசித்த பிறகு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது கல்லீரல் கழிவுகளை நீக்கும். உடலுக்கு டிடாக்ஸிக்கிபேக்‌ஷனாக செயல்படும்.

ஆளி விதைகள்
ஆளி விதைகள்Twitter

2வது வாரம் - மலக்குடல் மற்றும் பெருங்குடலுக்கான பானம்

ஆளி விதைகள் - 2 ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1 ½ டம்ளர்

மிக்ஸியில் ஆளிவிதைகளைப் பொடித்துக்கொள்ள வேண்டும். பொடித்த விதைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில், பசித்த பிறகு குடிக்க வேண்டும். தேங்கிய கழிவுகள் வெளியேறும். மலத்தை அடக்காதீர்கள். மலம் கழிய அனுமதியுங்கள்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா Twitter

3வது வாரம் - நச்சுக்களை நீக்கும் பானம்

அஸ்வகந்தா - 50 கிராம்

நெல்லிக்காய்- 50 கிராம்

கடுக்காய் - 50 கிராம்

மூன்றையும் தலா 50 கிராம் இடித்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியில் 20 கிராம் எடுத்து, பிளாக் டீயில் கலந்து, வாரம் இருமுறை சாப்பிட்டுவரக் கல்லீரல் ஆரோக்கியமாகும். பால், சர்க்கரை சேர்க்கக் கூடாது. கருப்பட்டி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம். நெல்லியில் உள்ள வைட்டமின் சி, அஸ்வகந்தாவில் உள்ள சத்துக்கள், கடுக்காயில் உள்ள இரும்புச்சத்து ஆகியவை ஒன்று சேரும்போது கல்லீரல் பலமாகும். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

புதினா
புதினாTwitterர்

4வது வாரம் - வயிற்றைச் சுத்தம் செய்யும் பானம்

புதினா - அரைக் கைப்பிடி

தேன் - ஒரிரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 பழம்

இஞ்சி - அரை இன்ச்

தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி, புதினா நன்கு இடித்துச் சேர்க்கவும். பின்னர், வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம். பசித்த பின் வெறும் வயிற்றில் குடிக்கவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com