பயணம் செய்வதால் உண்மையாகவே மன அழுத்தம் குறையுமா? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

WebMD படி , உங்கள் மன அழுத்தத்தைப் போக்கவும், மன அமைதியை கொண்டுவரவும் பயணம் பயனுள்ளதாக இருக்கும். பயணத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
4 Reasons Why Travel Is Good For Your Mental Health
4 Reasons Why Travel Is Good For Your Mental HealthTwitter
Published on

நம்முடைய அன்றாட வாழ்க்கை ஒரு மிஷின் போல் ஆகிவிட்டது. சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்கு செல்வது என ஒரே மாதிரியான வழக்கத்தில் சிக்கிக் கொள்கிறோம்.

சில சமயங்களில் இதிலிருந்து ஒரு பிரேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இல்லையென்றால் ஒரு வாரம் லீவ் எடுத்து எங்கையாவது பயணம் மேற்கொள்ளலாம் என்றும் எண்ணுவோம்.

பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாக மாறிவிட்டது. தனிமையில் இருந்தால், டிப்பிரஷனாக இருந்தால், மன உளைச்சலில் இருந்தால், சும்மா இருந்தால் என பயணம் செய்வதற்கு 1000 காரணங்களை தேடிக் கொள்கின்றனர்.

பயணம் செய்வது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். WebMD படி , உங்கள் மன அழுத்தத்தைப் போக்கவும், மன அமைதியை கொண்டுவரவும் பயணம் பயனுள்ளதாக இருக்கும். பயணத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மன அழுத்தம் குறையும்

அன்றாட வாழ்க்கையிலிருந்து ரிலாக்ஸ் செய்ய எங்காவது பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் உடலில் கார்டிசோலின் அளவு குறையும்.

இது மன அழுத்தத்தை வேகமாக குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் குறைவாக இருக்கும்போது, ​​அடுத்து உங்கள் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.

மன அமைதி

பொதுவாக வெளியில் எங்காவது சென்று வந்தாலே ரிலாக்‌ஸாக இருக்கும்.

மலை, நதி கரை என எங்காவது அமர்ந்து சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது, ​​மனதிற்கு அமைதி கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் அந்த பயணம் தனிப்பட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தேட சிந்திக்க உதவும்.

பிரச்சனையிலேயே இல்லாமல் அதைவிட்டு சற்று விலகி இருந்து பார்த்து எளிமையான தீர்வை கண்டுபிடிக்க உதவும் இந்த பயணம்.

பாசிடிவ் எண்ணங்கள்

அன்றாட வாழ்கை, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் அழுத்தம் என நம்மை அறியாமலே நமக்கு எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கிவிடும்.

இதுபோன்ற சூழலில் ஒரு பிரேக் எடுத்து பயணம் செய்யும் போது, ​​அது உங்கள் எண்ணகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நேர்மறையாக சிந்திக்கவும், புத்துணர்ச்சியுடன் பணிக்கு திரும்பவும் முடியும்.

4 Reasons Why Travel Is Good For Your Mental Health
பைக் டிரிப் செல்கிறீர்களா? என்னென்ன பொருட்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்?

கிரியேட்டிவிட்டி அதிகரிக்கும்

வீடு, வேலை என ஒரு சர்கிள் விட்டு வெளியே பயணிக்கும் பொழுது, உங்களுக்குள் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பயணத்தின் போது புதிய கலாச்சாரம், மொழி, உணவு, மக்கள், இசை போன்றவற்றை கற்க முடியும்.

இவை அனைத்தும் திறனை வளர்க்க உதவும்.

4 Reasons Why Travel Is Good For Your Mental Health
இந்தியாவின் இந்த பாரம்பரிய கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இங்கு என்ன ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com