காலை உணவு என்பது கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டிய முக்கிய உணவு என்று வீட்டில் உள்ளவர்கள் அல்லது மருத்துவர்கள் கூறுவதை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.
பரபரப்பாக வாழ்க்கையின் ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். வேலைக்கு செல்பவர்கள் அரக்கபறக்க சாப்பிடாமல் கூட செல்வார்கள்.
சம்பாதிப்பதே இந்த உணவுக்காக தான் என்பதை மறந்து உணவு சாப்பிடக் கூட நேரமில்லை என்கின்றனர் சிலர்.
ஆனால், காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எது இருக்கிறதோ அதனை காலை உணவாக எடுத்துகொள்கின்றனர். ஆனால் உங்கள் நாளை இந்த ஐந்து உணவுப் பொருட்களுடன் தொடங்கக் கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். என்னென்ன உணவுப் பொருட்கள் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பழச்சாறுகளில் நார்ச்சத்து இல்லை, காலையில் அதை முதலில் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். பழச்சாறுக்குப் பதிலாக ஒரு பழத்தை சாப்பிடலாம். எலுமிச்சை தண்ணீர், வெள்ளரிக்காய் சாறு ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை காலையில் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.
சிலர் இந்த பிரேக் ஃபர்ட்க்கு சாக்கோஸ் போன்றவையை எடுத்துக்கொள்வார்கள். இதனை சிலர் டையட் உணவு, லைட் ஃபுட் என ஆரோக்கியமானதாக பார்க்கின்றனர். ஆனால் இது முற்றிலும் பதப்படுத்தப்பட்டவை.
தானியங்களை குறைவாக கொண்டும், அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளதாகவும் அவை உள்ளது. போதுமான நார்ச்சத்து இல்லாததால், உங்கள் காலையைத் தொடங்குவதற்கு அவை சரியான தேர்வல்ல.
அவசரமான காலை நேரங்களில் சரியான காலை உணவைப் பற்றி யோசிக்காமல் பேன் கேக், வேஃபர் போன்ற உணவுகளை உட்கொள்கின்றனர்.
காலையில் இவற்றை முதலில் சாப்பிடுவதால் சரியாக ஊட்டசத்து கிடைப்பதில்லை, பசியை மட்டுமே இது போக்குகிறது.
குறைந்த ஆற்றலையும், குறைந்த உற்பத்தித்திறனையும் உங்களுக்கு அளிக்கும். அதனால் கவனமாக காலை உணவை தேர்வு செய்யுங்கள்.
எழுந்தவுடன் தேநீர் அருந்துவது உடலுக்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும். காலையில் அதிக அளவு சர்க்கரை, காஃபின் மற்றும் நிகோடின் ஆகியவை அமிலத்தன்மை, வயிற்றுக்கு கேடு விளைவிக்கும்.
இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யலாம்.
பழங்களின் சுவையுடன் இருக்கும் தயிரினை யோகர்ட் என்பார்கள்.
இதனை பெரும்பாலும் காலை உணவுத் தேர்வாக சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.
இதில் சேர்க்கப்படும் எசன்ஸ் சர்க்கரை விரைவாக எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, தேன் அல்லது பழங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust